Load Image
Advertisement

3வது ஆட்சியில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: அமித்ஷா நம்பிக்கை

Lok Sabha Elections 2024: India will become 3rd largest economy in 3rd regime: Amit Shah hopes   3வது ஆட்சியில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: அமித்ஷா நம்பிக்கை
ADVERTISEMENT
ஆமதாபாத்: பா.ஜ., வின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

குஜராத்தில் ரூ.1,950 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்த, பின் அமித்ஷா பேசியதாவது: வரும் லோக்சபா தேர்தலில் ஆளும் பா.ஜ., 370 தொகுதிகளை கைப்பற்றும். பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில், முதல் 5 ஆண்டுகள், காங்கிரஸ் ஆட்சி செய்த போது தோண்டிய குழியை நிரப்புவதில் சென்றுவிட்டது. பிரதமர் மோடி கற்பனை செய்ய முடியாத பல பணிகளை செய்துள்ளார்.

10 ஆண்டுகளில், பிரதமர் மோடி நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தை வகுத்தார். ஒரு திட்டத்தை வகுத்து, கடின உழைப்புடன் செயல்படுத்தும் திறன் பிரதமர் மோடிக்கு உள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்து உலக அளவில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


வாசகர் கருத்து (20)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இந்தியா ஆகும். ஆனால் எங்களை ஆகவிடமாட்டேன் என்கிறீர்களே என்று எதிர்க்கட்சியினர் வருத்தம்.

  • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

    ராஜன், சக்தி பார்த்தசாரதி, நாராயணன் முத்து, தசரதன் போன்ற கொத்தடிமைகள் புலம்பல் அதிமாக இருக்கிறது. கனடா கொத்தடிமையை மறந்துவிட்டேன். இன்னுமும் ஆஸ்திரேலியா பொய் அய்ங்காரின் புலம்பலை காணோம்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஒண்ணாவதுல ,இரண்டாவதிலேயே ஒண்ணும் கிழிக்க முடியல ,இந்த லட்சணத்துல மூன்றாவது முறை ஆட்சி வேறு கேக்குதா...???

    • Raa - Chennai,இந்தியா

      கோவம் வருது இல்லா? வரணுமே உங்களுக்கெல்லாம்? அப்பத்தானே ஆட்சி நல்ல நடக்குதுன்னும், இந்திய மக்களுக்கு நடக்கோதுனு எங்களுக்கும் தெரியவரும்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    கேள்வி கேட்டா காத தூரம் ஓடிப்போயிடுவாங்க,கண்டிப்பா பதில் கிடைக்காது சக்தி பார்த்தசாரதி அவர்களே....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறினால் நடுத்தர மக்களுக்கும் ஒன்றும் இல்லை .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்