Load Image
Advertisement

திரிணமுல் காங்., அலுவலகத்தில் பெண் பலாத்காரம்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

Trinamul Congress, rape of woman in office: Smriti Irani alleges  திரிணமுல் காங்., அலுவலகத்தில் பெண் பலாத்காரம்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு
ADVERTISEMENT

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் ஹிந்து பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்கம் மாநிலத்தில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. அங்குள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் ஹிந்து பெண்களை திரிணமுல் காங்., எம்எல்ஏ., ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது உதவியாளர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் எழுந்தது. இந்த புகார்களை தேசிய மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியது.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது உதவியாளர்களை கைது செய்யக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர். அவரது உதவியாளர் ஷிபோபிரசாத் ஹஸ்ராவின் வீட்டை மக்கள் அடித்து நொறுக்கினர். போராட்டம் வலுத்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு மேற்குவங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இங்கு நான் பார்த்தது பயங்கரமானது, அதிர்ச்சியானது, என் உணர்வுகளை நொறுக்கியது. நான் பார்த்திருக்கக்கூடாத ஒன்றைக் கண்டேன்; கேள்விப்படாத பல விஷயங்களைக் கேட்டேன். ரவீந்திரநாத் தாகூரின் மண்ணில் இப்படி நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாட்டின் சட்டங்களின்படியும், எனக்குள்ள அதிகாரத்திற்குட்பட்ட எதுவாக இருந்தாலும் அதனை செய்வேன். நிச்சயம் துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க உதவுவேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு மாநில அரசிடமும் கோரியுள்ளார்.

ஸ்மிருதி இரானி

சம்பவம் பற்றி மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: மேற்குவங்கம் மாநிலம் சந்தேஷ்கலியில் திருமணமான இளம் ஹிந்து பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். திரிணமுல் அலுவலகத்தில் ஒவ்வொரு நாள் இரவும் அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். திரிணமுல் கட்சியை சேர்ந்த குண்டர்கள் அழகான ஹிந்து பெண்களை வேட்டையாடுகின்றனர். அவர்களின் கணவர்களை மிரட்டுகின்றனர். சம்பவம் பற்றியும், ஷேக் ஷாஜகான் எங்கே என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளித்தே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து (11)

 • Sampath Kumar - chennai,இந்தியா

  நீங்க எங்கே இருந்திங்க ஓ புரியுது

 • Indian - Vellore,இந்தியா

  இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் என்று பேசுறீங்களே

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  அப்படி எல்லாம் எதுவும் நடக்கவே இல்லை என்று மமதா இப்பொழுது கூறுவார் பாருங்கள்.

 • அருண் குமார் - ,

  ஜஸ்ட் மிஸ் உபிலே இல்லையா இருந்து இருந்தால் நாலு நாளைக்கு விவாதம் பண்ணி இருப்போம்

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  இந்திய அளவில் ஹிந்துக்களிடம் வாக்குகளை பெற்றதுக்கொண்டு பாஜக அவர்களுக்கு என்ன செய்கிறது என்று மேற்குவங்க மக்கள் கவனிப்பார்கள் ..... இப்படி வதந்தி பரப்பி நீங்கள் மேற்குவங்கத்தில் ஆட்சிக்கு வந்துவிட முடியாது ......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்