Load Image
Advertisement

8 நாட்களுக்குப் பின் சைதை துரைசாமியின் மகன் உடல் மீட்பு

Saithai Duraisamys son recovered after 8 days   8 நாட்களுக்குப் பின் சைதை துரைசாமியின் மகன் உடல் மீட்பு
ADVERTISEMENT
சிம்லா: சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு ஹிமாச்சல்லில் மீட்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் இருந்து 6 கி,மீ தொலைவில் உடல் கண்டெடுக்கப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.


சென்னை சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாநகர முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி, 45; திரைப்பட இயக்குனரான இவர், 2021ல், விதார்த் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில், என்றாவது ஒரு நாள் என்ற படத்தை இயக்கினார். தற்போது பெயரிடப்படாத, 'கிரைம் திரில்லர்' படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
அதற்காக, திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் கோபிநாத், 32, என்பவருடன், ஹிமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை தேடி வந்தார். கடந்த பிப்.,4ம் தேதி 'இன்னோவா' காரில், கோபிநாத், வெற்றி ஆகியோர், ஹிமாச்சல பிரதேசம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் சீறிப் பாய்ந்தது. 200 அடி பள்ளத்தில் உருண்டு ஆற்றில் விழுந்து மிதந்தது. தகவல் அறிந்து, ஹிமாச்சல பிரதேச போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, காரில் இறந்த நிலையில், டிரைவர் தன்ஜின் மீட்கப்பட்டார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய கோபிநாத்தும் மீட்கப்பட்டார். ஆனால், வெற்றி என்னவானார் என்பது தெரியவில்லை. இதையடுத்து மீட்பு படையினர் வெற்றியின் உடலை தேடி வந்தனர். 8 நாட்களுக்கு பிறகு நதியில் இருந்து வெற்றியின் உடலை மீட்பு படையினர் மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக வெற்றியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (21)

  • Sureshkumar - Coimbatore,இந்தியா

    ஆழ்ந்த இரங்கல்கள்.

  • ALAGAPPAN NACHIAPPAN NACHI -

    ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ

    செனாப் நதி இன்னமும் வேகமாக ஆழமாக ஓடும் ..காரே கிடைக்காது

  • Jay - Bhavani,இந்தியா

    அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

    ஓம் ஷாந்தி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்