Load Image
Advertisement

திமுக.,விடம் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்: திருமாவளவன் பேட்டி

Lok Sabha Elections 2024: We have asked DMK for 4 constituencies: Thirumavalavan interview   திமுக.,விடம் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்: திருமாவளவன் பேட்டி
ADVERTISEMENT

சென்னை: லோக்சபா தேர்தலில் 3 தனித்தொகுதிகள், ஒரு பொது தொகுதி என மொத்தம் 4 இடங்களை ஒதுக்குமாறு திமுக.,விடம் கேட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இது தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக.,வின் குழுவிடம் வழங்கினோம். அதில் 3 தனி தொகுதிகள், ஒரு பொது தொகுதி என 4 இடங்களை ஒதுக்க வேண்டும் என கோரினோம். கொள்கை சார்ந்து இயங்க கூடியது இந்த கூட்டணி, 2010 முதல் தொடர்கிறது.

பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தில் 'இண்டியா' கூட்டணி இயங்கி வருகிறது. அதிமுக, பா.ஜ., கூட்டணி சிதறி கிடக்கிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 7 தனித்தொகுதிகளில் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 தொகுதிகளையும், பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய 3 பொது தொகுதிகளையும் திமுக.,விடம் வழங்கியுள்ளோம். அதில் எந்தெந்த தொகுதிகளில் போட்டி மற்றும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி தொகுதி இறுதியான பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (44)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    இதை எதுக்கு அவனுங்க கிட்டே கேட்கணும் நீயே நிக்கலாமே நாப்பது தொகுதியில்?

  • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

    நான்கு என்று கூறிவிட்டு மூன்று என்று எழுதி பின்னர் அதை அடித்துவிட்டு இரண்டு சீட்டுகள் கொடுத்துவிட்டு கடைசியில் ஒரு சீட் அளிப்பார்கள். கவலை வேண்டாம். வெறும் வீறாப்புதான்

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    இவனுக்கு கொடுக்கப்பட்ட பிலாஸ்டிக் சேரில் நான்கு கால்கள் ஒழுங்காக இருந்தனவா ? பெருசா பேசவந்துட்டான் ...

  • M Ramachandran - Chennai,இந்தியா

    அடிமைய்யகள் ட்டிமாண்டெல்லாம் வைக்க கூடாது வேண்டு மென்றால் 2000. பிரியாணி பொட்டலம் இனாம் பாகெட்ஸ் இலவசமாக கேட்கலாம்

  • SIVA - chennai,இந்தியா

    மீண்டும் சொத்துவரியை உயர்த்த , மின் கட்டணத்தை உயர்த்த , அணைத்து பொருட்களின் விலையையும் உயர்த்த ஒன்றியா கூட்டணியை ஆதரித்து வாக்களியுங்கள் ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்