Load Image
Advertisement

நம்பிக்கை ஓட்டெடுப்பில் நிதீஷ் அரசு வெற்றி: எதிர்க்கட்சி எம்எல்ஏ.,க்களும் ஆதரவு

Nitish government wins in trust vote: Opposition MLAs also support   நம்பிக்கை ஓட்டெடுப்பில் நிதீஷ் அரசு வெற்றி: எதிர்க்கட்சி எம்எல்ஏ.,க்களும் ஆதரவு
ADVERTISEMENT

பாட்னா : பீஹாரில் புதிதாக அமைந்துள்ள முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் 5 எதிர்க்கட்சி எம்எல்ஏ.,க்களுடன் சேர்த்து பெரும்பான்மை எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன் நிதீஷ் அரசு வெற்றி பெற்றது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதீஷ் குமார், சமீபத்தில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்தார். அதன்பின், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்தார். இதையடுத்து, பீஹார் முதல்வராக ஒன்பதாவது முறையாக நிதீஷ் பதவியேற்ற நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த சம்ரத் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில், பீஹார் சட்டசபையில் இன்று (பிப்.,12) நிதீஷ் குமார் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தியது. மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பீஹார் சட்டசபையில், பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏ.,க்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், 129 பேர் நிதீஷ் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த 5 எம்எல்ஏ.,க்களும் நிதீஷ்க்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். பெரும்பான்மை எம்எல்ஏ.,க்கள் ஆதரவளித்ததால் ஓட்டெடுப்பில் நிதீஷ் அரசு வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து (15)

  • Siva - Aruvankadu,இந்தியா

    தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளிடம் தமிழன் ஏமாறுவது போலத்தான்.

  • Arumugam Saravanan - puducherry,இந்தியா

    மீண்டும் மீண்டும் நீதான் இங்கு வேண்டும் ஒவ்வொரு ஏழைகள் குடும்பம் 2லடசம் இலவசம் தொழில் தொடங்க. மதுவிலக்கு இளம் விதவைகள் இல்லாத மாநிலம்.சாதிவாரி கணக்கு எடுப்பு.இந்தியால் அதிக கால்சென்டர் உள்ள மாநிலம் பஞ்சாயத்து தேர்தல் 50%பெண்கள் ஆறுமுகம் என்கிற சரவணன் மாநில தலைவர் ஐக்கிய ஜனதா தளம் புதுச்சேரி

  • g.s,rajan - chennai ,இந்தியா

    நம்பிக்கை மோசடிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி .....

    • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

      இதே மாதிரி நம்பிக்கை துரோகம் செய்துதானே, இதுக்கு முன்னாடி, திருட்டு லாலு கட்சிக்கூட கூட்டு வெச்சு முதலமைச்சரா இருந்தார்? அது வெற்றியா, இல்லை, தோல்வியா ????

  • g.s,rajan - chennai ,இந்தியா

    தன்மானத்தை விற்றுவிட்டார் .....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தப் பொழப்புக்கு மூணு முழம் ......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்