Load Image
Advertisement

"கடின உழைப்பால் வெற்றி": 1 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணி ஆணை வழங்கி பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி: இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாட்டில் யு.பி.ஐ., மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் முறையை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். முன்னதாக, ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், 1 லட்சம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய பின், கடின உழைப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என பிரதமர் மோடி பாராட்டினார்.
Latest Tamil News

யு.பி.ஐ சேவையை துவக்கினார் மோடி



இலங்கை, மொரிஷியஸ் நாட்டில் யு.பி.ஐ., மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் முறையை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் பங்கேற்றனர்.

Latest Tamil News
இலங்கை, மொரிஷியஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். கடந்த வாரம் பிரான்சில் துவங்கப்பட்ட நிலையில், மேலும் யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Latest Tamil News

புரட்சிகரமான மாற்றம்



நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ‛‛டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிய கிராமத்தில் உள்ள சிறிய கடைகளில் கூட, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மூன்று நட்பு நாடுகளுக்கு இன்று சிறப்பான நாள். இன்று நாம் நமது வரலாற்று உறவுகளை நவீன டிஜிட்டல் முறையில் இணைக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது: சில வாரங்களுக்கு முன்பு ராமர் கோவில் திறக்கப்பட்டதற்கு நான் பிரதமர் மோடியை வாழ்த்துகிறேன். 1000 ஆண்டுகளுக்கும் மேலான தென்னிந்திய நாணயங்கள் வெவ்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இன்னும் மேலும் அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

1 லட்சம் பணி நியமன ஆணை



முன்னதாக, ஆண்டுதோறும் ரோஜ்கர் மேளா என்னும் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு உரிய நபர்களை தேர்ந்தெடுத்து பிரதமர் மோடி அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார். இன்று(பிப்.,12) 1 லட்சம் பேருக்கு பணி நியமனம் ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கடின உழைப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில், 2014ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் ஆட்சியில் இருந்த அரசை விட பா.ஜ., வேகமாக செயல்படுகிறது.

ஒவ்வொரு இளைஞரும் தனது திறனை நிரூபிக்க சம வாய்ப்புகளைப் பெறத் துவங்கி உள்ளார். ஆட்சேர்ப்பு நடைமுறையை வெளிப்படைத்தன்மையுடன் மத்திய அரசு செய்கிறது. எங்களுக்கு முன் இருந்த அரசை விட 10 ஆண்டுகளில் 1.5 மடங்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.



வாசகர் கருத்து (10)

  • Devan -

    இப்படி ஒரு லட்சம், 70000 என்று இதுவரை எவ்வளவு நபர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டு உள்ளது என ஏதாவது கணக்கு இருக்கிறதா?

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    அரசுப்பணி ஆணை வழங்குதல் பிரதமரின் வேலையா?? ஓ .... வேலை கொடுத்துட்டாராமா?? அப்போ பிஜேபிக்கு குத்திர வேண்டியதுதான் ......

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவில் அப்போ வேலை நியமனம் இல்லாமல் வேலைக்காக காத்துக்கொண்டு இருக்கும் மீதம் உள்ள இளைஞர்கள் வேலை கிடைக்காமலேயே ரிட்டையர்டு ஆயிடுவாங்க போலத் தெரியுது....

  • அப்புசாமி -

    ரெண்டு கோடி வேலைன்னுட்டு, ஒரு லட்சத்துக்கு கடுமையா உழைச்சு முக்குறாங்களே...

  • K.Ramakrishnan - chennai,இந்தியா

    ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம்னு சொன்னீங்க.... பத்து வருஷத்துல 20 கோடி பேருக்கு வேலை தந்திருக்கணும். இப்ப ஒருலட்சம் பேருக்குத் தான் வேலை தந்திருக்கீங்க... மீதியை எப்ப தருவீங்க. பிரதமர்ஜி...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்