Load Image
Advertisement

சட்டசபையில் நடந்தது என்ன?: கவர்னர் மாளிகை விளக்கம்

Governor Ravi: What Happened in the TNAssembly?: Governors House Explanation  சட்டசபையில் நடந்தது என்ன?: கவர்னர் மாளிகை விளக்கம்
ADVERTISEMENT

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று (பிப்.,12) கவர்னர் ஆர்.என்.ரவி 3 நிமிடத்தில் தனது உரையை முடித்தார். இதற்கான காரணம் மற்றும் நடந்த நிகழ்வுகள் குறித்து கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

தமிழக சட்டசபை இன்று (பிப்.,12) கவர்னர் உரையுடன் துவங்கியது. அப்போது உரையின் துவக்கம் மற்றும் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என முன்பே கூறியும் அதனை அரசு புறக்கணித்ததாகவும், உரையில் உண்மைக்கு மாறான அம்சங்கள் இடம்பெற்றதாகவும் கூறி 2 நிமிடத்தில் தனது உரையை முடித்தார் கவர்னர் ஆர்.என்.ரவி. இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில் நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டு கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்.,9ம் தேதி கவர்னரின் உரை ஆவணம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. அதில் உண்மைக்கு மாறாக தவறான அம்சங்கள் அடங்கிய பல பல பத்திகள் இருந்தன. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையைக் காட்டவும், கவர்னர் உரையின் துவக்கத்திலும் முடிவிலும் அதை இசைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக முன்னதாக முதல்வருக்கும், சபாநாயகருக்கும் கவர்னர் கடிதம் எழுதியிருந்தார்.

கவர்னரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு மன்றமாக இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். கவர்னரின் அறிவுரையை அரசு புறக்கணித்தது.

உண்மைக்கு மாறான தகவல்கள்

இன்று காலை 10 மணிக்கு கவர்னர் ஆற்றிய உரையில், சபாநாயகர், முதல்வர், எம்எல்ஏ.,க்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திருவள்ளுவரின் 738வது குறள் அடங்கிய முதல் பத்தியையும் படித்தார். அதன்பிறகு, அதில் இடம்பெற்ற தவறான கூற்றுகள், உண்மைக்கு மாறான பத்திகள் இடம்பெற்றிருந்ததால்
அரசியலமைப்புச் சிறப்புகளைக் கருத்தில் கொண்டு தனது உரையை படிக்க இயலாது என்பதை கவர்னர் வெளிப்படுத்தினார்.

சபாநாயகர் அவதூறு

அதன்பின் சபாநாயகர், உரையின் தமிழாக்கத்தைப் படித்தார். அந்த உரை முடியும் வரை கவர்னர் அமர்ந்திருந்தார்; சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதத்திற்காக எழுந்தார். இருப்பினும், சபாநாயகர் திட்டமிட்டிருந்த அட்டவணையை பின்பற்றாமல், கவர்னருக்கு எதிராக அவதூறை பேச துவங்கினார். நாதுராம் கோட்சே மற்றும் பலவற்றை பின்பற்றுபவர் என்றும் பேசினார்.

சபாநாயகர் தனது அநாகரிகமான நடத்தையினால், சபையின் கவுரவத்தையும், அவரது நாற்காலியின் கவுரவத்தையும் குறைத்தார். கவர்னருக்கு எதிராக வசை பாடிய போது, கவர்னர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார். இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வீடியோ வெளியீடு

சட்டசபையில் இன்று கவர்னர் ரவி ஆற்றிய உரை அடங்கிய வீடியோ கவர்னர் மாளிகையின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 3:17 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவை தமிழ் சப் டைட்டிலுடன் வெளியிட்டுள்ளனர்.வாசகர் கருத்து (79)

 • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

  தேசியகீதத்திற்கு அவமரியாதை தந்த, ஸ்டாலின் அரசை கலைப்பது இந்தியா ஒருமைப்பாட்டிற்கு நல்லது. பொன்முடியின் கதை உதயநிதிக்கு நேரும் காலம் விரைவில் வரும்.

 • venugopal s -

  ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறான விஷயங்கள் என்ன இருந்தன என்று தைரியம் இருந்தால் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது தானே!

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  நமது நாட்டில் மாநில அளவில் சட்டசபை, ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாக ஆகி விட்டது. மாபியா கும்பல்கள் அரசியல் சாசனத்தில் இருக்கும் ஓட்டைகள் மூலமாக உள்ளே நுழைந்து, காவலுக்கு இருப்போரை வாசலில் நிற்க வைத்து, உள்ளே வாங்கி கொள்ளை நிம்மதியாக, அமைதியாக அடித்து, மூட்டை, மூட்டையாக கட்டி, வண்டிகளில் ஏற்றி எல்லோர் கண்களுக்கும் முன்னால், யாரும் எதுவும் செய்ய இயலாதபடி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சட்டங்களை மதிப்பதில்லை. கெஜ்ரிவால் இதுவரை எந்த விசாரணைக்கும் செல்லவில்லை. பா சிதம்பரம் முன் ஜாமீன் வாங்கியே உலக சாதனை படைத்து, எந்த கவலையும் இன்றி வலம் வந்துகொண்டிருக்கிறார். கருணாநிதியை வலைபோட்டு பிடிக்கவே முடியவில்லை கடைசிவரை. ஒவ்வொரு மாநிலத்திலும் இதே மாதிரி ஆகி விட்டது. பிடித்தால், ஜனநாயகம் மறைந்து விட்டது, அராஜகம் நடக்கிறது என்று கூச்சலிட்டு போலீசாரை நடுங்க வைக்கிறார்கள். சில மாநிலங்களில், பணத்தை வாங்கிக்கொண்டு, ரோஹிங்கியா, வங்காளதேச முஸ்லிம்களை எல்லா இடங்களையும் ஆக்கிரமிக்க வழி செய்து கொடுத்து, வாக்கு வங்கிகளாக பயன்படுத்துகிறார்கள். இஷ்டத்துக்கு இலவசமாக எல்லாவற்றையும் வாரி வழங்கி, கஜானாவை காலி செய்து, கடன்களை ஏற்றி, மத்திய அரசு வஞ்சம் செய்கிறது என்று முழங்குகிறார்கள். இந்த மாதிரி போனால், பல மாநிலங்கள் சீர்குலைந்து, பொருளாதாரம் குன்றி, அவ்வையார் சொன்னது போல, "வேதாளம் சேருமே, வெள்ளெருக்கு பூக்குமே, பாதாள மூலி படருமே" என்று ஒட்டடை, தூசி படிந்து நாற்றமடிக்கும் நிலைக்கு வந்து விடும். அரசியல் அமைப்பை மாற்ற வேண்டிய தருணம் வந்து விட்டது. திருடர்கள் பதவிக்கு வருவதை தடுக்க வேண்டியதுதான் முதல் கடமை. எல்லா மாநிலங்களையும், சிறியதாக பிரித்து, மத்தியிலிருந்து, ரவி போன்ற ஆளுநர்களை அமர்த்தி, போலீசை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து, நேராக ஆளவேண்டியதுதான். விஷயம் தெரிந்த, நிர்வாகம் செய்யத்தெரிந்த ஆளுநர்கள் அமர்த்தப்பட்ட வேண்டும். அவர்கள் முன்னாள் ராணுவ மேஜர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெரிய பல்கலைக்கழகங்களை நிர்வாகித்தவர்கள், வங்கிகளை நிர்வாகித்தவர்கள் என்கிற பட்டியலிலிருந்து கொண்டு வரலாம். நாடு சீரழிந்து போவதைப்பார்த்து, இந்த மாதிரி மனிதர்கள் அரசியல் துறை பக்கமே வராமல் ஒதுங்கி விட்டார்கள். இது ரவுடிகளுக்கு சாதகமாக அமைந்து விட்டது. சுடலைக்கு, உதயநிதிக்கும், கமல ஹாசனுக்கும், விஜய்க்கும், ராஜனிகாந்துக்கும் நிருவாகத்தை பற்றி என்ன தெரியும்? கருணாநிதிக்கு எந்த நிர்வாகம் தெரிந்தது? கொள்ளை அடித்து, குடும்பத்துக்கு சொத்து சேர்த்து வைப்பது நல்ல நிர்வாகம் அல்ல. எம்ஜியார் நல்ல மனிதர். ஆனால் அவர் எந்த நிர்வாகமும் செய்யவில்லை. ஜெயலலிதா, சசிகலா கும்பலோடு சேர்ந்து பகல் கொள்ளையில் இறங்கியதுதான் எல்லோருக்கும் தெரிந்தது. இவர்களால் மாநிலங்கள் முன்னேறவில்லை. மத்திய அரசு அவ்வப்போது ஏற்படுத்தி வைத்த கட்டமைப்பில்தான் இத்தனை வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. நமது மாநிலங்கள் மக்களுக்காக ஏற்படுத்தப்படவில்லை. மாபியா கும்பல்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலைமை மாறியே ஆக வேண்டும். இவர்கள் நமது நாட்டை நல்ல விலைக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

 • Arachi - Chennai,இந்தியா

  ஆளுநரியின் செயல் உயர்ந்த பதவிக்கு அழகல்ல. அவர் நடவடிக்கை முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போன்று தோன்றுகிறது. சிறுபிள்ளைத்தனம்.

  • Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ

   திரா(வக)விட பன்றிக்கூட்டம் இறைக்கும் சேற்றைப் பூசிக்கொண்டு அங்கேயே உட்கார்ந்துகொண்டிருக்க, அவரென்ன அள்ளக்கைக் கட்சிக்களா, அல்லது 200 ரூபாய் உபீஸுகளா?

 • Nachiar - toronto,கனடா

  கவனர்ஜி உங்கள் தர்ம யுத்தம் தொடர நல் வாழ்த்துக்கள். ஜெய் பாரத்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement