Load Image
Advertisement

டில்லியில் மார்ச் 12 வரை 144 தடை உத்தரவு: பெரிய அளவில் கூட்டங்கள் கூட தடை

Prohibition 144 in Delhi till March 12: Ban on even large gatherings   டில்லியில் மார்ச் 12 வரை 144 தடை உத்தரவு: பெரிய அளவில் கூட்டங்கள் கூட தடை
ADVERTISEMENT

புதுடில்லி: விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு, வரும் மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
2020ல் விவசாயிகள் போராட்டத்தின் போது அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி, நாளை (பிப்.,13) தலைநகர் டில்லிக்குள் கூட்டமாக நுழைந்து பேரணி மற்றும் போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. ஹரியானா மற்றும் உ.பி., எல்லையில் 5,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளைத் தடுக்க, பஞ்சாப், சண்டிகர், ஹிமாச்சல் பிரதேச எல்லையான பஞ்ச்குடாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ள நிலையில், டில்லி முழுவதும் வரும் மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறி போராடுவோரை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய அளவில் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டில்லி போலீசார் கூறுகையில், விவசாயிகளின் போராட்டங்களை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு மோதல் சம்பவங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, கூட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினர்.


வாசகர் கருத்து (9)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அது ஏன் மார்ச் 12 வரை? ஒரு ஐந்து, ஆறு வருடத்துக்கு தடையுன்னு போடமுல்ல?

  • g.s,rajan - chennai ,இந்தியா

    அரசாங்கம் அடக்குமுறையைக் கையாள்வது அதிகார துஷ்ப்ரயோகத்தையே காட்டுகிறது .....

  • Rajasekar Jayaraman -

    சென்னை கைவிட்டு போனதோ திருட்டு திராவிஷத்துக்கு பயத்தில் 144 தடை உத்தரவு.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    விவசாயிகளின் போராட்டத்தை சந்திக்கத் துணிவில்லை .....

  • GMM - KA,இந்தியா

    மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. விவசாய மசோதா திரும்ப பெற்று விட்டது. அந்நிய கூலிப்படை தேசத்திற்கு எதிரான எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளும். ஏராள அமைப்பு, சங்கம், தொண்டு நிறுவனங்கள்.... முதலில் அந்நிய நிதி ஒரு ரூபாய் பெற்றாலும் தணிக்கை, கண்காணிப்பு தேவை. மாத தேவைக்கு அதிகமாக பணத்தை எடுக்க அனுமதிக்கும் சட்டம் தேவை. டெல்லியில் அதிக போராட்டம் துவங்க வகை செய்வது கலால் ஊழல் கெஜ்ரிவால்? அரசுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் தேச பொருளாதார பாதுகாப்பு முதன்மை பெற வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்