Load Image
Advertisement

"துணை முதல்வர் நியமனம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்ல": உச்சநீதிமன்றம்

"Appointment of Deputy Chief Minister not unconstitutional": Supreme Court    "துணை முதல்வர் நியமனம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்ல": உச்சநீதிமன்றம்
ADVERTISEMENT
புதுடில்லி: ‛‛ துணை முதல்வர் நியமனம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்ல'' என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் மாநிலங்களில் துணை முதல்வர் நியமனம் செய்யப்படுவர்.

முதல்வரின் பணிச்சுமை காரணமாகவும், துறைகள் பிரித்து கொடுப்பதற்காகவும் துணை முதல்வர் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநிலங்களில் துணை முதல்வர்களை நியமிக்கும் நடைமுறையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ‛‛துணை முதல்வரை நியமிக்கும் நடைமுறை பல மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.
நீங்கள் யாரையாவது துணை முதல்வர் என்று அழைத்தாலும், அது ஒரு அமைச்சரைக் குறிக்கும். துணை முதல்வர் ஒரு மாநில அரசின் மிக முக்கியமான அமைச்சர். ஒரு மாநிலத்தில் துணை முதல்வர் நியமனம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல எனக் கூறி, பொது நல மனுவை தள்ளுபடி செய்தது.


வாசகர் கருத்து (6)

  • GMM - KA,இந்தியா

    துணை முதல்வர் அரசியல் சாசனம் பதவி அல்ல. நிரந்தர அரசு பதவியும் அல்ல. 5 ஆண்டுகள் தற்காலிக பணி. தற்காலிக பதவி அரசியல் சாசனத்தில் இருக்காது. ஒரு பதவியை உருவாக்கும் போது அதன் பணி விதிகள் அவசியம். தற்காலிக பதவிக்கு பணி கட்டுப்பாடு இருக்காது. அரசு நிர்வாகத்தில் முதலில் (சசிகலா) நடராஜன் PRO வாக கருணாநிதி நியமித்த நினைவு. பணி விதிகள் வகுக்க வில்லை? பரிந்துரை தான் இறுதி முடிவு. நிர்வாக விதிகள் முடங்கின. ஆல் பாஸ் திராவிடர்களுக்கு பாதிப்பு புரிய முடியவில்லை. அதனை தொடர்ந்து ஏராளமான புதிய துணை பதவிகள். நிர்வாக குழப்பம் அதிகரிப்பு. துணை முதல்வர், இணை முதல்வர் அரசியல் குழப்பம் உண்டாக்கும். தீர்ப்புக்கு வக்கீல் வாதம் தான் வழிகாட்டி.வழக்கறிஞர்கள் வாதம் தவறு.

  • Dharmavaan - Chennai,இந்தியா

    அரசியலமைப்பு சாசனத்தில் அந்த பதவி இருக்கா

  • GMM - KA,இந்தியா

    (மாநில) முதல்வர் பணி சுமை. துணை முதல்வர் நியமனம். துணை முதல்வர் பணி சுமைக்கு மாற்று யார்? ஆளும் கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு என்ன பணி தான் கொடுக்கப்பட்டுள்ளது? எதிர் கட்சிக்கு ஏன் இல்லை? துணை முதல்வர் நியமிக்கும் நடைமுறை பல மாநிலங்கள் இல்லாத சட்ட, நிர்வாக அதிகாரம் துஸ்பிரயோகம் செய்து பெற்றுவிட்டன. இதனை கவர்னர் / நீதிமன்றம் / தேர்தல் ஆணையம் நிறுத்தி இருக்க வேண்டும்.

  • ஆரூர் ரங் -

    துணைப் பிரதமர்/முதல்வர் பதவிக்கு அரசியல் சட்டத்தின் அங்கீகாரமில்லை. அப்பதவியைப் பற்றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. முன்பொருமுறை ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்போது துணைப் பிரதமர் என்று கூறாமல் அமைச்சர் என்றே கூறினார். சம்பந்தப்பட்ட நபர் தானே துணைப் பிரதமர் என்று தானாக சேர்த்துப்படித்து பிரமாணம் எடுத்து😛 நகைப்புக்குள்ளானார்.

  • Seshan Thirumaliruncholai - chennai,இந்தியா

    துணை முதல்வருக்கு மூத்த அமைச்சர்களை விட கூடுதல் சம்பளம் என்றால் நியாயம் இல்லை. இருக்காது. சம்பளத்தைவிட பதிவுதான் முக்கியமாய் கருதுவார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்