Load Image
Advertisement

தேமுதிக யாருடன் கூட்டணி?: பிரேமலதா பல்டி

Lok Sabha Elections 2024: Who is DMDK in alliance with?: Premalatha  தேமுதிக யாருடன் கூட்டணி?: பிரேமலதா பல்டி
ADVERTISEMENT

சென்னை: சில நாட்களுக்கு முன்பாக '14 லோக்சபா சீட்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தருபவர்களுடன் கூட்டணி அமைப்போம்' எனக் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தற்போது, '14 பிளஸ் 1 சீட் கேட்டது மாவட்ட செயலாளர்கள் தான், கட்சி தலைமை கேட்கவில்லை' என புது விளக்கம் அளித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் குறித்தான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு, தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தின் முடிவில், '14 லோக்சபா சீட்கள், ஒரு ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும்' என செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில், தேமுதிக.,வின் 24வது கொடிநாளை முன்னிட்டு தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: நான் சொல்வதை புரிந்துகொள்ளாமல் மாற்றுக்கருத்தை பதிவிடுகின்றனர். 14 பிளஸ் 1 சீட் கேட்டது மாவட்ட செயலாளர்கள் தான்; கட்சி தலைமையின் கருத்தோ, என்னுடைய கருத்தோ இல்லை. திமுக, அதிமுக, பா.ஜ., ஆகிய கூட்டணிகளில் இடம்பெறுவது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

கூட்டணி குறித்து மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி குறித்து கட்சி தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (39)

  • Hari - chennai,இந்தியா

    என்ன அவசரம் தேர்தல் முடிந்த பின் உங்கள் கூட்டணி முடிவை சொன்னால் போதும்.

  • Raa - Chennai,இந்தியா

    யாரவது இருக்கிறீங்களா? ரொம்ப நேரமா தனியா பேசுவது போலவே உள்ளது.....யாரவது இருக்கிறீங்களா? ...

  • நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா

    யாரு தட்டுல காசு நிறைய போடுறாங்களோ அவங்களை வாழ்த்தணும் எப்படியோ இந்த தேர்தலுடன் எல்லா சில்லுண்டி கட்சிகளும் ஒழிந்தால் சரி

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    கூட்டணியெல்லாம் உங்களுக்கு எதுக்கு? நீங்க தனியா போட்டி போட்டால், நீங்கதான் ஜெயிப்பீங்க.

  • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

    வழக்கம்போல கழட்டி விடுங்க. தனியாக போய் டெபாசிட் இழந்து கையில் வைத்துள்ள பணம் முழுவதும் இழந்தால் தன இந்த பொம்பளைகு கணவன் அருமை தெரியும். விஜயகாந்த் அரசியல் வாழ்கை அஸ்தமனம் ஆனதுக்கு இந்த பொம்பளையும் ஒரு கரணம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்