Load Image
Advertisement

வங்கி ஊழியரை மிரட்டி பலாத்காரம் செய்த ரவுடி

The robber threatened and raped the bank employee   வங்கி ஊழியரை மிரட்டி பலாத்காரம் செய்த ரவுடி
ADVERTISEMENT
திருச்சி, தில்லை நகரில் தனியார் வங்கியில் பணிபுரிந்த, 33 வயது பெண் ஊழியர் ஒருவர், 2020ல் தாளக்குடி அருகே, அகிலாண்டபுரத்தில் வீட்டு மனை வாங்கினார். அவர், வீடு கட்ட, கீழவாங்கரை வெற்றிச்செல்வனிடம், முன்பணமாக 2 லட்சம் ரூபாய் கொடுத்தார். வெற்றிச்செல்வன் வீடு கட்டித் தராமல் ஏமாற்றினார்.

தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு ஊழியர் வாயிலாக, ரவுடியான வெங்கங்குடியை சேர்ந்த சித்தார்த், 37, என்பவரின் உதவியை பெண் ஊழியர் அணுகினார். பெண் ஊழியரின் கணவர் வெளிநாட்டில் இருப்பதை அறிந்த சித்தார்த், 2023 ஜூலையில், அந்த பெண்ணை கரூர் பைபாசில் லாட்ஜுக்கு அழைத்து சென்று, கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டி, கடந்த ஆண்டு அக்., 2ல் பெண்ணிடம், 4 சவரன் செயினை பறித்தார். ரவுடி என்பதால் பெண் போலீசில் புகார் அளிக்கவில்லை. தற்போது வேறு ஒரு வழக்கில் சித்தார்த் கைதான நிலையில், நேற்று முன்தினம் வங்கி பெண் ஊழியரும் புகார் அளித்தார். லால்குடி அனைத்து மகளிர் போலீசார், சித்தார்த் மீது ஒன்பது பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

திருநெல்வேலி அருகே 2 பேர் கொலை; 3 பேர் கைது



திருநெல்வேலி, சிவந்திபட்டியை அடுத்துள்ள பற்மநாதபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன் 27. செய்துங்கநல்லூர் அருகே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.

துாத்துக்குடி மாவட்டம் சத்தக்காரன்பட்டி பகுதியில் அவரை வழிமறித்த 6 பேர் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். செய்துங்கநல்லூர் போலீசார் அவரது உடலை மீட்டனர். கொலை தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பு 23, சிவபெருமாள் 19, சமாதானபுரத்தை சேர்ந்த கார்த்திக் 29 ஆகியோரை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் ரெட்டியார்பட்டி டாஸ்மாக் அருகே வாலிபர் ஒருவரை கொலை செய்துவிட்டு தான் இந்த கொலையை செய்ததாக தகவல் தெரிவித்தனர். பெருமாள்புரம் போலீசார் நள்ளிரவில் சம்பவ இடத்தில் பார்த்தபோது சமாதானப்புரத்தைச் சேர்ந்த பாபு செல்வம் 21, என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை மீட்டனர்.

நர்சிங் கல்லுாரி தாளாளர் கைது



தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தனியார் டிப்ளமோ நர்சிங் பாரா மெடிக்கல் கல்லுாரியை திப்பணம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் 32, நடத்தி வந்தார். கல்லுாரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர்.

கலெக்டர் கமல்கிஷோர் உத்தரவின் பெயரில் வருவாய் அதிகாரிகள் கல்லுாரிக்கு சீல் வைத்தனர். மாணவிகள் வேறு கல்லுாரியில் படிக்க ஏற்பாடு செய்தனர்.

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்



ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். அதே கல்லுாரியில் தஞ்சாவூரைச் சேர்ந்த கேசவன் 19 கேட்டரிங் பிரிவில் படிக்கிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கேசவன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பேராவூர் அருகே நண்பர் வீட்டில் பலாத்காரம் செய்தார்.

இதனால் கர்ப்பமான சிறுமியை ஜன.,9ல்- கேசவன் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு பெற்றோரிடம் விஷயத்தை கூறிய நிலையில் கேசவனின் தாய், அக்கா உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தனர். கரு கலைந்தபின் சிறுமியை கேசவன் ராமநாதபுரம் அழைத்து வந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்த சிறுமி பெற்றோரிடம் தனக்கு நடந்ததை கூறினார். பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கேசவன், அவரின் தாய், அக்காவை தேடுகின்றனர்

பெண் ஆபாச படங்கள் பகிர்ந்த நபருக்கு 'காப்பு'



புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயது பெண் செவிலியர், உடல் நலம் குன்றியவர்கள் வீடுகளுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் ஊழியர்களை நியமித்து, தனி அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார்.

அப்போது, புதுக்கோட்டை தனசேகரன், 57, அறிமுகம் கிடைத்தது. தனசேகரன் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும், பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். நம்பிய பெண், புதுக்கோட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து ஓராண்டாக வாழ்ந்தார். சில மாதங்களில், அவரது முன்னாள் மனைவி குடும்பத்தினர் பிரச்னை செய்தனர்.

அப்போது தான், தனசேகரன் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என தெரிய வந்தது. மேலும் சில பெண்கள், தனசேகரன் ஏமாற்றி விட்டதாக பிரச்னை செய்தனர். தனசேகரனுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், புதுச்சேரி பெண் அவரை பிரிந்தார்.

ஆனால், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு தனசேகரன், பெண்ணுக்கு நெருக்கடி கொடுத்தார். அவர், மறுக்கவே ஆத்திரமடைந்த தனசேகரன், தனிமையில் எடுத்த அந்தரங்க படங்களை பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டினார். இணையதளத்திலும் படங்களை வெளியிட்டார். புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், தனசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண் பயணியை திட்டிய கண்டக்டருக்கு சரமாரி அடி



திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, நேற்று காலை, துவாக்குடி நோக்கி தனியார் பஸ் சென்றது. அதில், பயணித்த பெண்ணை, உரிய நிறுத்தத்தில் இறக்கி விடாமல், சற்று தள்ளி இறக்கி விட்டுள்ளனர். பெண்ணுக்கும், கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கண்டக்டர், பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

அதன் பின், துவாக்குடி சென்ற பஸ், மீண்டும் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்த போது, சூளைக்கரை பஸ் ஸ்டாப்பில், ஐந்து பேர் கொண்ட கும்பல் பஸ்சில் ஏறி, மாத்துாரை சேர்ந்த கண்டக்டர் மூக்கையன், 39, என்பவரை சரமாரியாக தாக்கியது.

பயணியர், கண்டக்டரை மீட்டனர். பஸ் கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கண்டக்டர் மூக்கையன் புகாரில், காந்தி மார்க்கெட் போலீசார் கும்பலை தேடி வருகின்றனர்.

ஜிப்மர் ஊழியர் கொலை; புதுச்சேரியில் பயங்கரம்



புதுச்சேரி, பிச்சைவீரன்பேட் வடக்கு கிணறு வீதியை சேர்ந்தவர் அமுத ஆனந்தன், 28; ஜிப்மர் ஒப்பந்த ஊழியர். நேற்று முன்தினம் நள்ளிரவு, தன் நண்பர்களுடன் ஜான்குமார் நகர் விரிவாக்கத்தில், காலிமனையில் மது அருந்தியுள்ளார். அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல், அங்கு மது அருந்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

அமுத ஆனந்தனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. அவர் மயங்கி விழுந்தார். அவரது நண்பர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். ரெட்டியார்பாளையம் போலீசார் தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்.

5 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை



தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பாரத் நகரை சேர்ந்தவர் ராஜேஷ், 42; கோவை தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி ஆர்த்தி, 40; தனியார் வங்கி ஊழியர். இவர்களின் மகள்கள் ஆருத்ரா, 11, சுபத்ரா, 7.

நேற்று மதியம் ஆர்த்தி, பாபநாசத்தில் தோழி வளைகாப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, இரண்டு மகள்களுடன் உத்தாணி பகுதியில், கண்களை கட்டியபடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கும்பகோணம் ரயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

இதே போல, திருவிடைமருதுார், கட்டளை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ரேவதி, 50, மகள் மகேஸ்வரி, 30, ஆகியோர் நேற்று மாலை மயிலாடுதுறையில் இருந்து மைசூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

காதல் மனைவி கொலை; கணவன் வெறிச்செயல்



கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன், 32. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் நிஷா, 24. இருவரும் காதல் திருமணம் செய்தனர். இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் கரூரில் வசித்த நிலையில், நிஷா, அவ்வப்போது பல்லடத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். பல்லடத்தில் வேலை பார்த்து, அங்கேயே தங்க நிஷா விரும்பினார். இதற்கு பாரதிதாசன் மறுத்தார். சில தினங்கள் முன் பல்லடம் வந்த நிஷா, கரூர் திரும்பவில்லை. பாரதிதாசன் அழைத்தும் அவர் வரவில்லை.

நேற்று பல்லடம் வந்த பாரதிதாசன், நிஷாவை அழைக்க, வர மறுத்த அவர், தன் தாலியை கழற்றிவைத்தார். இதனால் ஆத்திரமடைந்த பாரதிதாசன், அரிவாளால் மனைவியை வெட்டிக் கொலை செய்தார். பல்லடம் போலீசார், பாரதிதாசனை கைது செய்தனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் பலி



உத்தர பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தின் மத்துவாந்த் பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. வட மாநிலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளில் துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதீக் சுக்லா என்பவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை கொண்டாடினார்.

அப்போது அந்த துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு, ஷாம்பு சுக்லா, 5, என்ற சிறுவன் மீது பாய்ந்தது. இதில், அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார், பிரதீக் சுக்லா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து (4)

  • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

    என்ன .

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    ரவுடி என்று தெரிந்தே, அவருடன் லாட்ஜுக்கு செல்லும் வங்கி பெண் ஊழியர், 16 வயதினிலே காதலித்து கர்ப்பமாகும் பெண், எல்லாம் தெரிந்த 50 வயதிலும் ஒரு ஆணுடன் live-in உறவில் இருந்து, அந்தரங்க புகைப்படங்களை எடுக்க அனுமதித்த ஒரு நிறுவனர், காதலித்து 24 வயதுக்கு உள்ளேயே 3 குழந்தைகளை பெற்றெடுத்து பிரிய முடிவே செய்து கொலையான பெண் ........... முன்னேறிய, அறிவு பூர்வமான சமூகத்தின் அழிக்க முடியாத அடையாளங்கள் .....

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஆக, இன்றைய விடியல் பல குற்றங்களுடன் இனிதே துவங்கியது.

  • S. Gopalakrishnan -

    எழுதப் படிக்கத் தெரிந்த வங்கி ஊழியர், ரௌடி எனத் தெரிந்தும் அவனுடன் விடுதியில் அறை எடுத்து தங்குவாராம் பின் அவன் கற்பழித்து விட்டதாக குய்யோ முறையோ என்று கதறுவாராம் !

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement