Load Image
Advertisement

தமிழக நகரங்கள் அனைத்து துறைகளிலும் வளர்ந்துள்ளன ; உதயநிதி பெருமிதம்

 Tamil cities have grown in all sectors Udhayanidhi prides in Coimbatore  தமிழக நகரங்கள் அனைத்து துறைகளிலும் வளர்ந்துள்ளன ; உதயநிதி பெருமிதம்
ADVERTISEMENT

கோவை: கோவையில் வசிப்போருக்கு தினமும் குடிநீர் வழங்கும் வகையில், பில்லுார் மூன்றாவது திட்ட துவக்க விழா நேற்றுநடந்தது.

திட்டங்களை துவக்கி வைத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது:கோவை மக்களுக்கு, தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தோம். அதை இன்று நிறைவேற்றியுள்ளோம். இனி, இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்கும். தமிழகம் முழுதும் உள்ள அனைத்து நகரங்களுக்கும், சீராக குடிநீர் வழங்குவதற்கான பணிகளை செய்து வருகிறோம்.

நகரங்களில், 2035ம் ஆண்டு என்ன மக்கள் தொகை இருக்கும்; 2050ம் ஆண்டு என்ன மக்கள் தொகை இருக்கும் என்பதையெல்லாம் இப்போதே கணித்து, திட்டங்களை வகுக்க வேண்டும். இதையெல்லாம் கணித்துதான், அதிக கவனம் எடுத்து செயலாற்றி வருகிறோம்.

தமிழகத்தில் சென்னை மட்டுமின்றி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல்,மதுரை, திருச்சி போன்ற நகரங்களும் வளர்ச்சி அடைந்திருக்கின்றன.
Latest Tamil News
தொழில், கல்வி, சுகாதாரம், நகர உள்கட்டமைப்பு வசதி என அனைத்து துறைகளிலும் நகரங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. மற்ற மாநிலங்களுக்கு மாடல் அரசாக, தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும், திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.

கோவை மக்களிடம் கேட்டுக் கொள்வது என்னவெனில், அடுத்த இரு மாதங்கள் மிக மிக முக்கியமான காலம். சென்ற முறை சின்ன, சின்ன தவறுகள் நடந்திருந்தாலும், அவற்றை திருத்திக் கொண்டுள்ளோம்.

இவ்வாறு, அவர் பேசினார்.


வாசகர் கருத்து (52)

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  இனி இதுபோன்ற கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும்போது தயவுசெய்து நாற்காலி காலியாகாமல் ஒவ்வொருவருக்கும் ஒரு நாற்காலி கூட்டம் முடிந்ததும் சொந்தம் என்று சொல்லிவிட்டால் கூட்டம் முடியும்வரை உட்கார்ந்து பிறகு அவர்களே அந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு செல்வார்கள் பிறகு கூட்டம் கட்டுக்கடங்காது

 • katharika viyabari - coimbatore,இந்தியா

  இவ்வளவு கொள்ளை அடித்த பிறகும் நாம சொல்லுராட நம்புறதுக்கு ஒரு கூட்டம் இருக்குப்பா. எதையாவுது சொல்லுவோம்.

 • adalarasan - chennai,இந்தியா

  சென்னைய நகரம்தான் தென்னெந்தியாவின் நுழைவு தளம் என்ற பெயர் 40வருடங்களுக்குமுன் இருந்தது} இப்பொழுது பெங்களூர் அந்த இடத்தை பிடித்துவிட்டது?டெக்னாலஜி ,, IT, யிலும் சென்னை ,HYDERABAD கீழ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது திராவிட ஆட்சியில்?

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இதுதான் வளர்ச்சி அடைந்த தமிழகம் ....

 • SUDHAKAR JANAKIRAMA RAO - CHENNAI,இந்தியா

  மாண்புமிகு அமைச்சர் அவர்களே, தாம்பரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை, சீரான குடிநீர் விநியோகம், தரமான சாலை வசதி, சிட்லபாக்கம் ஏரி சீரமைக்கும் பணிகள் இவை எல்லாம் எந்த நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தாங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்றுவிட்டு வந்தபிறகு இதுபோன்ற அறிக்கைவிட்டால் நன்று.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement