Load Image
Advertisement

" பொய் சொல்லும் தி.மு.க. " - ஜெ.பி. நட்டா கடும் தாக்கு

 DMK is lying that Tamil Nadu is being neglected: Natta  " பொய் சொல்லும் தி.மு.க. " - ஜெ.பி. நட்டா கடும் தாக்கு
ADVERTISEMENT

சென்னை: ''தி.மு.க., அரசின் செயல்பாடுகள், எமர்ஜென்சியை நினைவுபடுத்து கின்றன. தி.மு.க.,வை மக்கள் துாக்கி எறியும் காலம் வந்து விட்டது,'' என, பா.ஜ., தேசியதலைவர் ஜெ.பி.நட்டா பேசினார்.

தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட, 'என் மண்; என் மக்கள்' யாத்திரை, 200வது தொகுதியாக நேற்று சென்னைதுறைமுகம் தொகுதியில் நடந்தது.

அதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் நட்டா பேசியதாவது:

தேசிய வளர்ச்சி குறித்து பேசும் போது, தமிழகத்தின் பங்கை குறிப்பிடாமல் இருக்க முடியாது. பிரதமர் மோடியின் இதயத்திற்கு நெருக்கமானதாக தமிழகம் உள்ளது. அவர் எங்கு சென்றாலும், தமிழகத்தின் இலக்கியங்களை சுட்டிக் காட்டுகிறார்.

சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தியாவுக்கு உணவு பாதுகாப்பை அளித்தார். இன்று உணவு உற்பத்தியில் நாடுதன்னிறைவு பெற்றுள்ளதுடன், வெளிநாடுகளுக்கு வழங்குகிறோம்.
Tamil News
Tamil News
Tamil News


தமிழகம் மிகச் சிறந்த கலாசாரம், பாரம்பரியம், பழமையான மொழி போன்றவற்றை தன்னகத்தே கொண்டது. ஆன்மிகத்திற்கு தமிழகம் அளித்துள்ள பங்கையும் மறக்க முடியாது.

ஆனால், இன்றுதமிழகம் மோசமான தலைவரால் ஆளப்படுகிறது. தமிழக மக்கள் கடுமையான உழைப்பாளிகள்; நாட்டுக்குவிசுவாசமாக உள்ளனர்.

துாக்கி எறியும் காலம்மோசமானது. தி.மு.க., தலைமைக்கு ஞானம் இல்லை. ஜனநாயகத்துக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வு இல்லை. நான் வரும் போது, தெரு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன; கடைகள் மூடப்பட்டிருந்தன; போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த காட்சிகள், எமர்ஜென்சி காலமான நெருக்கடி நிலையை நினைவுபடுத்துகின்றன.

முதல்வர் ஸ்டாலினுக்கு சொல்கிறேன்; உங்களின் செயல்பாடுகளால், உங்களை துாக்கி எறியும் காலம் வந்து விட்டது. போலீசார் கடைகளை மூட வைக்கின்றனர். இது, ஜனநாயகமா; தமிழகத்தின் பாரம்பரியமா?

தி.மு.க., தெரு விளக்குகளை அணைக்கிறது. ஆனால், தி.மு.க., விளக்கை அணைப்பதற்கான நேரம் வந்து விட்டது. அதற்கான யாத்திரையை அண்ணாமலை நடத்தி வருகிறார். யாத்திரை, 200 தொகுதிகளை நிறைவு செய்துள்ளது. வரும் 25ம் தேதி, 234 சட்டசபை தொகுதிகளில் யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.

பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி அடையச் செய்துள்ளார். 'ஒரே பாரதம்; உன்னத பாரதம்' என்பதே நம் கொள்கை. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை தந்துள்ளார்.

2 ம் இடத்தில் இரும்பு உற்பத்திமத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், உலகப் பொருளாதாரத்தில் நம் நாடு ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது. நம்மை ஆண்ட பிரிட்டனை முந்தி வந்துள்ளோம். பா.ஜ.,வுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால், உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். தற்போது, நம் நாடு ஆட்டோ மொபைல் உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி, மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது. முன்பெல்லாம் மொபைல் போன்களில், 92 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டன; இன்று 97 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இரும்பு உற்பத்தியில், இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளோம்.

தமிழகம் புறக்கணிப்பா இல்லை ?அனைத்துக்கும் மேலாக, 500 ஆண்டுகளுக்கு மேலாக தீராமல் இருந்த ராமஜென்ம பூமி பிரச்னை தீர்க்கப்பட்டு, ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, நாட்டில் பிரிக்கப்படாத பகுதியாக காஷ்மீரை மாற்றி உள்ளோம்.அடுத்து வரும் லோக்சபா தேர்தலில், மோடிக்கு ஆதரவு தர வேண்டும். 400 எம்.பி.,க்களுக்கு மேல் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும். தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக தி.மு.க., பொய் சொல்கிறது.

* நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தில், தமிழகத்தில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது

* இலவச காஸ் இணைப்பு கொடுக்கும் திட்டத்தில், தமிழகத்தில் 38 லட்சம் பேர் இணைப்பு பெற்றுள்ளனர்

* பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயன் பெற்ற நான்கு கோடி பேரில், 1.50 கோடி பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்

* விவசாயிகள் உதவித்தொகை பெறும் 12 கோடி பேரில், 38 லட்சம் பேர் தமிழக விவசாயிகள்.

தி.மு.க., என்றால் வாரிசு, பண மோசடி, கட்டப் பஞ்சாயத்து. தி.மு.க., அமைச்சர்களில் ஒருவர் சிறையில் உள்ளார்; மற்றொரு அமைச்சருக்கு சொத்து குவிப்பு வழக்கில், நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

தற்போது, 'இண்டியா' கூட்டணியை துவக்கி உள்ளனர். அந்த கூட்டணியில், பரூக் அப்துல்லா, அவரது மகன்; முலாயம் சிங், அவரது மகன், மருமகள்; லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி, மகன், மருமகள்; உத்தவ் தாக்கரே, அவரது மகன்; ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி; சோனியா, ராகுல், பிரியங்கா என, குடும்பங்கள் தான் உள்ளன.தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றவும், சொத்துக்களை பாதுகாக்கவும், இண்டியா கூட்டணியை துவக்கி உள்ளனர்.

இவ்வாறு நட்டா பேசினார்.வாசகர் கருத்து (75 + 37)

 • Sivagiri - chennai,இந்தியா

  கஜினிமுகமது முதல் ஔங்கசீப் வரை - அடித்த கொள்ளையை விட , தீமுகவும் , கருணாநிதியும் அவரது குடும்பமும் தமிழ்நாட்டிலும் , டில்லியில் கூழைக்கும்பிடு போட்டும் , குள்ளநரித்தனமாக கூப்டுச்சேர்ந்தும் , அடித்த கொள்ளை அதிகம் , தமிழ்நாட்டையே சூரையாடி விட்டார்கள் , இப்போ வந்து புலம்பினால் ஊர் சிரிக்கும் ,

 • Sivagiri - chennai,இந்தியா

  அடப்பாவிகளா - இத்தனை வருஷமா இவிங்கள உத்தம புருஷர்கள்-னு நம்பி , மோசம் போயிட்டீங்க - ஐம்பது வருடங்களாக கருணாநிதி , அவர் கூட்டாளிகள் அவரின் பல குடும்ப , வாரிசுகள் , ஸ்டாலின் , அழகிரி , முகமுத்து , கனிமொழி , இப்போ பேரன்கள் வரை , , பொய் , பித்தலாட்டங்கள், ஊழல் லஞ்ச லாவண்யங்கள், அடாவடி அகராதிகள் , வஞ்சக நரித்தனங்கள் , இன்னும் என்னென்ன செய்ய முடியுமோ அனைத்து பித்தலாட்டங்களின் மொத்த உருவம்தான் தீமுக முதலாளி குடும்பம் - இப்போதான் கொஞ்சமா புரியுது போல ,

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  நட்டா என்றால் யார் ?ஓஒ மதுரை அய்ய்ம்ஸ் 95% முடிந்து விட்டது என்று ஜோக் அடித்து சென்றவரா? இன்னும் பல ஜோக்குகளை சொல்வார் இவர் கண்டிப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் இவர் சென்றால் அந்த இடம் எதிர் காட்ச்சிக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  ஸ்டாலின் ஆதானிக்கு ஜிங்க்சா போடுகிறாரெ எதற்கு? குடும்பம் செழிக்கவா ஊபீஸ்களெ

 • K.Ramakrishnan - chennai,இந்தியா

  பொய் சொல்லாத அரசியல்வாதி யார்? ஆண்டுக்கு 2கோடி பேருக்கு வேலை, ஆளுக்கு ரூ.15லட்சம.... இது போன்ற பல பொய்களை சொன்னதே நீங்க தானே... பொய் சொல்வதில் எந்த அரசியல் வாதியும் யாருக்கும் குறைந்தவர் அல்ல...நாடு வளர்ச்சி அடைந்தது என்று ஆளுகிறவர்கள் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அதானியும் அமித்ஷா மகனும் வளர்ச்சி அடைந்த அளவில் 0.01 சதவீதமாவது அன்றாட கூலிகள் வளம் பெற்றுள்ளனரா? வறுமைக் கோட்டில் இருந்து 25 கோடி பேரை மீட்டோம் என்று சொல்வது ஏட்டளவில் தானே உள்ளது. இதுவே ஒரு பொய் தானே....

பிரதமர் மோடிக்கு எப்போதும் பிடித்தமான மாநிலம் தமிழ்நாடு: ஜெ.பி.,நட்டா (37)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  ஊழல் பண்ணினா ரெய்டு பண்ணுங்களேன் ,முறைகேடாக சம்பாதித்த பணத்தை ,சொத்துக்களை ரெய்டு பண்ணிப் புடியுங்க,உங்க ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்துங்க .....

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இந்தியப் பிரதமர் மோடிஜிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றால் உயிர் அவர்களின் மேல் எவ்வளவு அலாதிப்பிரியம் வைத்திருக்கிறார் தெரியுமா ....

 • Arachi - Chennai,இந்தியா

  இதே மாதிரி ஐஸ் வச்சவங்கள அதிகமாக பார்த்துட்டோம் நல்ல ட்ரெயினிங் மோடி சொல்லி அனுப்பிச்சாரா.?

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  பொய் பேசினாலும் ஒரு அளவு உண்டு.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  நட்டா அவர்களே ,மோடிஜிக்கு தமிழ்நாடு ரொம்பப் பிடிச்சுருக்கு,,தமிழ்நாட்டு மக்களைப் பிடிக்கல, அப்படித்தானே??? ....

 • venugopal s -

  அதனால் தான் வெள்ள நிவாரண நிதி கூடக் கொடுக்க வில்லையோ?

  • ஆரூர் ரங் -

   அது பெரிய பெரிய பேக்கேஜ் போட்டு ஊழல் பண்ணுவதால்தான்

 • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

  தீவிர அரசியலில் இருப்பவர்கள் ஒருத்தர் கூடவா பாஜகவிற்கு மாறவில்லை?

 • Indian - Vellore,இந்தியா

  அவருக்கு பிடித்தமான மாநிலம் குஜராத் கிடையாதா? பிறகு என் குஜராத் காரனுக்கு சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார் தமிழ் நாட்டுக்கு கொடுக்க மறுக்கிறார்

 • rameshkumar natarajan - kochi,இந்தியா

  PM gave Rs.1000 Cr from PM Fund to Gujarat, but he was here in TN for couple of days, he didn't utter a word on the flood devastation. Fantastic. Tamils will reply to BJP appriopriately.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  கருணாநிதிக்கு பிடித்தமான இடம் ஒன்று உண்டு. அது எது தெரியுமா? ஆம், அந்த ரயில் பெட்டியில் இருக்கும் அந்த கழிவறை. அது கருணாவுக்கு மிக மிக ராசியான இடம். அதில் டிக்கெட் எடுக்காமல் பயணித்துதான் சென்னை வந்து அவர் அரசியலில் பெரிய ஆள் ஆனார்.

  • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

   உமக்கு எப்படி தெரியும்

  • abdulrahim - dammam ,சவுதி அரேபியா

   தெரியாதா என்ன

  • Narayanan Muthu - chennai,இந்தியா

   பாம்பின் கால் பாம்பறியும்

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  மொத்தத்தில் பாஜக தேசியத் தலைவர் அவர்கள் தானாக எதையும் பேசவில்லை. அண்ணாமலையார் அவர்கள் சொன்னதை அப்படியே சொல்லி யிருக்கின்றார். ரொம்ப ரொம்ப நல்ல அரசியல்

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  நாட்டில் அத்தனை மாநிலங்களிருந்தும்தமிழ்நாடு மட்டும்தான் மிகவும் பிடித்த மான மாநிலமா? ஏன் உண்மையைமறைத்துப் பேசவேண்டும். எப்படியாவதுதமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டு வரவேண்டும், அதுதானே.உங்களின்அடிப்படை நோக்கம். உங்களின்மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதற்காக திருவள்ளுவர்பாரதியார்.மேல் இவ்வளவு அக்கறைக் காட்டவேண்டுமா? உண்மையை சொல்ல வேண்டுமானால் பெருமப்பான்மையானமக்களுக்கு இவர்கள் யாரென்றே சரியாகதெரியாத நிலையில் உங்களுக்கு.மட்டும்எப்படித் தெரிந்தது. இன்னும் மக்களைஏமாற்றிக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளுக்கே குறிப்பாக இந்துக்களுக்குஎதிரான திமுகவிற்கு இவர்களை பற்றி இன்னும் சரியாக தெரியாது அதற்குப் பதிலாக வள்ளுவருக்கு மரியாதை செய்யும் விதமாக திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அங்கீகரிக்கவேண்டும் தமிழகத்திற்கு மரியாதை செய்யும் விதமாக தமிழகத்தின் உயிர் நாடியான இருமொழிக் கொள்கையைஏற்றுக் கொள்ளுங்கள். தமிழகத்தில் குடும்பவாரிசை அகற்றுவோமென்றுச் சொல்லுங்கள். தமிழ்நாடு தானாகவே பாஜக விற்கு வாக்குகளை அள்ளிக் கொட்டுவார்கள்.

  • தமிழ் - ,

   என்னங்க... உண்மையை இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க.

 • venugopal s -

  தமிழகத்தில் பாஜகவின் கூட்டங்களுக்கு வரும் கட்சியினர் கூட்டத்தை விட மேடையில் உள்ள தலைவர்கள் கூட்டம் தான் அதிகமாக உள்ளது!

 • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

  அப்போ கன்னியாகுமாரி அல்லது தென் சென்னை அல்லது கோவை தொகுதிகளில் அவர் போட்டியிட்டால் நிச்சயம் பாஜகவிற்கு 10 சீட்டுக்கள் வெற்றி பெறுவது உறுதி.

 • Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்

  அலாதி பிரியம், எய்ம்ஸ் கட்ட மாட்டார், புயல் மழை வந்தால் எட்டி பார்க்க மாட்டார், நிவாரணம் தரமாட்டார்....அது என்ன பாசமோ

 • Bala - singapore,சிங்கப்பூர்

  உண்மை? திருட்டுத் திராவிடியன்கள் என்ற எண்ணம், தமிழர்களின் காதில் பூ இல்லை.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  திருநெல்வேலிக்கே அல்வாவா ...???.

 • Oviya Vijay -

  மனோதத்துவ ரீதியில் சொல்வதானால் உங்கள் கட்சியை சேர்ந்த அனைவரும் "ஒரே" விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லக் கொண்டிருப்பதனால் மக்களுக்கு சலிப்பு தட்டுமேயன்றி அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதே போல தான் இதுவும். ஏன் என்றால் அரசியலில் அனைவருமே திருடர்கள் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு மாறி விட்டது. யாரும் இங்கு யோக்கியர்கள் இல்லை என்ற முடிவிற்கு மக்கள் வந்து விட்டனர். "கை சுத்தம்" என்பதெல்லாம் காமராஜரோடு முடிந்து விட்டது.

 • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

  தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட வளர்ச்சியில் தனித்து நிற்பது எப்படி? 60 ஆண்டுகளில் என்ன நடந்தது? தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஐபோன் உற்பத்தி ஆலையான பாக்ஸ்கான் அமைந்துள்ளதை மையமாக வைத்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி குறித்து புகழாரம் சூட்டியுள்ளது. தமிழ்நாடு தொழில்துறையில் வெற்றியாளராக பயணித்து வருவதாகவும், நாட்டிலேயே அதிக பெண் தொழிலாளர்களை கொண்ட மாநிலமாக திகழ்வதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ஒவ்வொரு விதமான தொழில்களையும் குறிப்பிட்டு தமிழக தொழில்துறையை பாராட்டியுள்ளது அந்த பத்திரிகை. ஆனால், தமிழகம் மற்ற இந்திய மாநிலங்களை விட வளர்ச்சியில் தனித்து நிற்பது எப்படி? இதற்கான விதை எங்கு போடப்பட்டது? ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு பாதையில் செல்லும்போது தமிழகம் தனக்கான பாதையை அமைத்து முன்னேற தொடங்கியது எப்போது? அதன் பலன் என்ன? உண்மையில் தமிழகம் போதுமான வளர்ச்சி அடைந்திருக்கிறதா? தமிழ்நாட்டின் தனித்துவம் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை கணக்கிட சுகாதாரம், கல்வி, தனிநபர் வருமானம் ஆகிய கூறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் சிசு மரண விகிதம் (IMR) 1000 பேருக்கு 8.2, தனிநபர் வருமானம் ரூ.1,66,727, உயர்கல்வி சேர்க்கை (GER) விகிதம் 47% என அனைத்திலும் இந்தியாவின் டாப் இடங்களை பிடித்துள்ளது தமிழ்நாடு. இந்த வளர்ச்சிக்கு காரணமாக 1960 களில் இருந்து தமிழ்நாட்டில் நடந்த கொள்கை மற்றும் அரசியல் மாற்றங்கள் கூறப்படுகின்றன. தமிழ்நாடு vs மத்திய அரசு தமிழ்நாடு அரசின் வளர்ச்சியை, மற்றுமொரு மாடலோடு ஒப்பிட்டு பார்த்தால் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று தொடங்கிய அவர் மத்திய அரசோடு ஒப்பிட்டு பேசினார். “மத்திய அரசு தங்களது வளர்ச்சி பாதையை 50, 60 களில் தான் முன்னெடுக்க தொடங்கினார்கள். அவர்கள் எடுத்த வளர்ச்சி பாதைக்கு நேர்மாறான பாதையை நாம் எடுத்ததின் விளைவு தான் தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கு காரணம்” என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம். இதற்கு உதாரணமாக “மத்திய அரசு வளர்ச்சி பகிர்வு(Growth With Distribution) என்ற பாதையை கையில் எடுத்தார்கள். அதன்படி முதலில் வளர்ச்சியடைதல், பின்னர் அதை பகிர்ந்து கொடுத்தல் என்ற வழியில் சென்றார்கள். முதலில் இந்த திட்டம் வளர்ச்சியை தந்தாலும், அது மக்களை சென்றடையவில்லை” என்கிறார். ஆனால், தமிழகமோ 1960களுக்கு பிறகு வேறு விதமான கொள்கையை பின்பற்ற தொடங்கியது. தமிழகத்தில் காங்கிரஸ் அரசு மாறி திமுக ஆட்சியை பிடித்த போது, சாமானிய மக்களுக்கு என்ன தேவையோ அதில் கவனம் செலுத்தினார்கள். யாசகர்கள் மறுவாழ்வு திட்டம், குடிசைமாற்று வாரியம், கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி, சாலை திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார் ஜோதி சிவஞானம். மேலும் பேசிய அவர், “திமுக வளர்ச்சியை பற்றி அதிகம் கவலைப்படாமல், மக்களுக்கு என்ன தேவை என்பதன் மீது அதிகம் கவனம் செலுத்தினார்கள். அதற்கு முன்பெல்லாம் அரசு செலவு செய்ததெல்லாம் அணை கட்டுவது போன்ற மூலதனம் சார்ந்ததாக இருந்தது. ஆனால், இவர்கள் தான் கல்வி, சுகாதாரம் என மக்கள் வளர்ச்சிக்கு தேவையான செலவுகளை செய்தார்கள்” என்று குறிப்பிடுகிறார். நட்டா அவர்களே நாங்கள் எங்கோ சென்று விட்டோம் நீங்கள் இன்னும் 1960 களில் இருக்குறீர்கள்

 • Karthikeyan K Y - Chennai,இந்தியா

  பி ஜே பி , மத்திய அரசு சாதனைகள், பிரதமர் மோடிஜி அவர்களின் தலைமை பண்பு இவற்றை பறை சாற்றை தவறிய அண்ணாமலை தன்னை முன்னிலை படுத்தி கட்சியை சேதப்படுத்தி கொண்டிருக்கிறார் திமுகவை பற்றியும், திமுக அமைச்சர்கள் பற்றியும், ஆட்சியின் செயல் பாடுகள் பற்றியும் , சனா தானத்தை பற்றியும், அதிகார துஷ்ப்ரயோகம் பற்றியும் பேசுவது ஒரு புறம் இருந்தாலும், மத்திய அரசின் திட்டங்கள் தமிழக பிஜேபி நிர்வாகம் தமிழக மக்களுக்கு என்ன என்ன செய்தது செய்கின்றது என்ன செய்யும் - தேர்தல் கணக்கில் திமுக முன்னாள் இருக்கிறது அதனை உடைப்பதற்கு பிஜேபி என்ன உத்தி வைத்து இருக்கிறது பி ஜிப் என்ன வோட்டு வங்கி இருக்கிறது எந்த வோட்டை பி ஜே பி மாற்ற பார்க்கிறது

 • Muthu Kumar - ,

  430 Jai shree Ram

 • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

  பாவம் dealing எல்லாம் முடிஞ்சி கூட்டணி கட்சி தலைவர்களுடன் மீட்டிங் என்று ஏமாற்றி வந்து PMK TTV PANNERSELVAM என்று கூட்டணி ஒருத்தர் இல்லை , அசிங்க பட்டார் அண்ணாமலை

  • KumaR - Tirunelveli,இந்தியா

   அவங்க தனியா நிக்கட்டும்.. உங்க திருட்டு திமுகவையும் கூட்டணி இல்லாம தனியா நிக்க சொல்லுங்க பாப்போம். அதுக்கு துணிவு இருக்கா உங்க தலைவருக்கு.. கட்சி ஆரம்பிச்ச நாள் ல இருந்து தனியா நிக்க வக்கு இல்லாதவங்க எல்லாம் அடுத்த கட்சியோட கூட்டணி பத்தி பேச வந்துட்டாங்க..

  • Narayanan Muthu - chennai,இந்தியா

   கூல் கூல் ஜெலுசில் எடுத்துக்கோங்கோங்க

 • Mariadoss E - Trichy,இந்தியா

  All the best Annamalai

  • Narayanan Muthu - chennai,இந்தியா

   வாழ்த்துக்கள் தமிழகத்தில் மொத்தமாக வாஷ் அவுட் ஆகவா. அப்படியென்றால் என்னுடைய வாழ்த்துக்களும் இதோ.

 • Mariadoss E - Trichy,இந்தியா

  அப்ப ஏனப்பா எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்க செய்கிறீர்கள். இப்ப என்ன எலக்சன் பாசமா?

 • J.Isaac - bangalore,இந்தியா

  கேப்பையில் தேன் வடிகிறது என்றால் கேட்பார்க்கு புத்தி எங்கே ?

  • ஆரூர் ரங் - ,

   செத்துப்போனவன் மூணாவது நாள் உயிரோடு திரும்பி வந்த கதையையே நம்புபவர்கள் 🤥நாங்கள்.

  • Govind - Delhi,இந்தியா

   அது சரி ஆனா மூணு தலைமுறையா ஒரு குடும்பம் தமிழ் நாட்டுல அவங்க ஆட்சியில் தேனொடுது பால் ஓடுது பேசுறத மட்டும் நீங்க நம்புறீங்களே .. அது ஏன் ?

 • g.s,rajan - chennai ,இந்தியா

  குறிப்பா பிஜேபி யினருக்கு தமிழ்நாட்டில் உள்ள தென் மாவட்டங்கள் என்றால் அலாதிப் பிரியம்.....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்