Load Image
Advertisement

இறகுப்பந்து விளையாட வேளச்சேரியில் அரங்கம்

 Stadium in Velachery to play volleyball    இறகுப்பந்து விளையாட வேளச்சேரியில் அரங்கம்
ADVERTISEMENT
வேளச்சேரி:அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி, எல்.எச்.நகர் 3வது குறுக்கு தெருவில், 3,000 சதுர அடி பரப்பு மாநகராட்சி இடம் உள்ளது.

இதில், தென் சென்னை தொகுதி எம்.பி., நிதி 58 லட்சம் ரூபாயில், 1,615 சதுர அடி பரப்பில் இறகு பந்து விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. மேற்கூரை, 25 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

சுற்றி உள்ள காலி இடத்தில் தரை சீரமைப்பு, செடிகள் நடப்படுகின்றன. தற்போது, 85 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

இம்மாதம், 25ம் தேதிக்குள், இம்மையத்தை பயன்பாட்டுக்கு திறக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement