Load Image
Advertisement

பாரத் ஆட்டா, பாரத் ரைஸ் கூட்டுறவு கடையில் கிடைக்குமா?

 Is Bharat Atta, Bharat Rice available in co-op store?    பாரத் ஆட்டா, பாரத் ரைஸ் கூட்டுறவு கடையில் கிடைக்குமா?
ADVERTISEMENT

சென்னை : குறைந்த விலை உடைய பாரத் ஆட்டா, பாரத் அரிசியை, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பொது மக்களுக்கு விற்குமாறு மத்திய அரசை, கூட்டுறவு துறை வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுதும் விளைச்சல் பாதிப்பால், கடந்த ஆண்டு இறுதியில் கோதுமை விலை உயர்ந்தது. தமிழகத்தில் வெளிச்சந்தையில், கிலோ கோதுமை மாவு விலை, 60 ரூபாயாக உள்ளது.

விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்குடன் மத்திய அரசு, 'பாரத் ஆட்டா' என்ற பெயரில், கிலோ கோதுமை மாவு, 27.50 ரூபாய்க்கு விற்க உத்தரவிட்டது.

இதற்காக தமிழகத்திற்கு, 1,000 டன் கோதுமை மாவு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த மாவு விற்பனை செய்யும் பணியை, 'நாபெட்' எனப்படும், மத்திய கூட்டுறவு நிறுவனம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது, வெளிச்சந்தையில் அரிசி விலையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கிலோ பொன்னி பழைய அரிசி விலை, 55 ரூபாயாக உள்ளது.

நாடு முழுதும், 'பாரத் ரைஸ்' என்ற பெயரில், கிலோ அரிசியை, 29 ரூபாய்க்கு விற்க மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.

மொத்தம், 5 லட்சம் டன் பாரத் அரிசி விற்கப்பட உள்ளது. அதில் தமிழகத்திற்கு, 22,000 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாரத் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ அளவில் கிடைக்கும். இந்த அரிசியை விற்க, தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய கூட்டு றவு நிதி மற்றும் மத்திய பண்டகசாலை, கேந்திரிய பந்தர் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்கள் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் வேன்களில், பாரத் அரிசியை விற்க உள்ளன. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பாரத் அரிசி, பாரத் கோதுமை மாவு விற்குமாறு, மத்திய அரசை கூட்டுறவு துறை வலியுறுத்திஉள்ளது.

கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:



கூட்டுறவு சங்கங்கள், ஏற்கனவே பல்பொருள் அங்காடிகளை நடத்துகின்றன; மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளன.

எனவே, 100 டன் அளவுக்கு பாரத் ஆட்டா மற்றும் குறிப்பிட்ட அளவு அரிசியை, கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக விற்குமாறு, மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.



வாசகர் கருத்து (12)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    பாரத மக்களுக்கு இந்தப் பத்து வருட ஆட்சியில் எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கலாமே

  • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

    புள்ளி வச்ச இ.ந்.தி.யா என்றால், ஆளும் கட்சிக்கு சந்தோசம். பாரத் என்பதில் திருட்டு திராவிடனுக்கு உடன்பாடில்லை. தமிழர்களுக்கு மிக்க சந்தோசம்.

  • Venkateswaran V - Periyakulam,இந்தியா

    Well. Bharat Rice and Atta can be sold through Co operatives with Modiji's photo No TN stickers of Karunanithi, Stalin and other insignificants.

  • Sivagiri - chennai,இந்தியா

    ஐயோ போச்சு - டில்லியில் இருந்து இப்போதைக்கு எந்த பொருளையோ பணத்தையோ - தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட யாரிடமும் கொடுப்பது மக்களுக்கோ நாட்டுக்கோ துரோகம் செய்வது போல - கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் - திருட்டுமாடல் கண்ட்ரோலில்தான் இருக்கின்றன - கட்டுச் சோற்றை குரங்குகளுக்கு மத்தியில் இருந்துகொண்டு பிரிப்பது போல -

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    ஆஹா வடஇந்திய பயிரை வளர்க்க சிறந்த திட்டம், அரிசிக்கு தடை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்