Load Image
Advertisement

பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என இ.பி.எஸ். மீண்டும்...திட்டவட்டம்!:

Lok Sabha Elections 2024: Palanisamy again says no alliance with BJP... Plan!: DMK is trying to gain advantage by creating confusion in the team.  பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என இ.பி.எஸ். மீண்டும்...திட்டவட்டம்!:
ADVERTISEMENT
'பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது, தி.மு.க., அணியில் குழப்பம் ஏற்படுத்தி ஆதாயம் பெறும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களின் போது, பா.ஜ.,வுடன் ஒட்டி உறவாடிய அ.தி.மு.க., தற்போது தனி அணி அமைத்து களமிறங்க தயாராகிவருகிறது.

லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தல், ஈரோடு தெற்கு இடைத்தேர்தல் என, தொடர் தோல்விகளை சந்தித்த அ.தி.மு.க., தலைமை, அதற்கெல்லாம் காரணம், பா.ஜ.,வுடனான உறவு தான் என்றுமுடிவெடுத்தது.

அதனால், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., விலகியதாக அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பகிரங்கமாகஅறிவித்தார்.

ஆனால், அரசியல் அரங்கில் பலரும், இது இரு கட்சியினரும் பேசி வைத்து நடத்தும் நாடகம் என்று விமர்சித்தனர். குறிப்பாக, தி.மு.க., தரப்பு, இந்த பிரசாரத்தை பெரிய அளவில் செய்து வந்தது. தேர்தல் நேரத்தில் மீண்டும் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமையும் என்றும் கூறி வந்தனர்.

மறைமுகமாக அழைப்புஅதற்கேற்ப, 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது' என, பா.ஜ., தரப்பில், எந்த உறுதியான தகவலும் தராமல் மவுனம் காக்கப்பட்டது. 'விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வருவர்' என, பா.ஜ.,வில் சில தலைவர்கள் சொல்லி வந்தனர்.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'கூட்டணி கட்சிகளுக்காக, பா.ஜ., கதவை திறந்தே வைத்திருக்கிறது' என, அ.தி.மு.க.,வுக்கு மறைமுகமாக அழைப்புவிடுத்தார்.

இதையடுத்து, மீண்டும்பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி மலரும் என்ற பேச்சு பலமாக அடிபடத் துவங்கியது.

ஏற்கனவே, பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்து விட்டதாக, போகும் இடமெல்லாம் சொல்லி வந்த பழனிசாமிக்கு, அமித் ஷாவின் பேட்டி திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதனால், கூட்டணியில்லை என்பதை உரத்த குரலில் சொல்ல முடிவெடுத்த பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியை, அதற்கான வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளார்.

தி.மு.க., - பா.ம.க., - காங்., - பா.ஜ., கட்சிகளிலிருந்து விலகிய, 10,000 பேர், அ.தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது.

இதில் பேசிய பழனிசாமி, ''பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று பலமுறை கூறி விட்டேன். ஆனால், ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள், பா.ஜ.,வுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக கூறுகின்றன. இன்று இறுதியாக, உறுதியாகக் கூறுகிறேன். பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை,'' என, திட்டவட்டமாக தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், ''அ.தி.மு.க., சரியான நேரத்தில், சரியான கூட்டணியை அமைக்கும். தி.மு.க., 10 நாட்களாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தியும், எதுவும் நடக்கவில்லை. கூட்டணி கட்சிகளை நம்பியேதி.மு.க., உள்ளது; அ.தி.மு.க., வோ மக்களை நம்பிஉள்ளது,'' என்றார்.

பழனிசாமியின் பேச்சு குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

லோக்சபா தேர்தலில், தி.மு.க., மட்டும் 35 இடங்கள் வரை போட்டியிட வேண்டும் என, அக்கட்சியினர் விரும்புவதால், கூட்டணிக்குள் பிளவு ஏற்படும்; அதனால், கூட்டணி கட்சிகள், தி.மு.க.,வை விட்டு விலகி, அ.தி.மு.க., பக்கம் வரும் என்று பழனிசாமி நம்புகிறார்.

அதேநேரத்தில், தி.மு.க.,கூட்டணியை விட்டு வெளியேறி வந்து, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்த பின், பா.ஜ.,வை நோக்கி பழனிசாமி சென்று விட்டால், நம் நிலை என்னாகும் என்ற பதற்றம், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கும் உள்ளது.

ரகசிய கருத்துக்கேட்புஅதை போக்கவே, இனி பா.ஜ.,வுடன் உறவு இல்லை என பழனிசாமி அடித்துக் கூறியிருக்கிறார். இதனால், தி.மு.க., கூட்டணியில் குழப்பம் ஏற்படும்; அதன் வாயிலாக, அ.தி.மு.க.,வுக்கு அரசியல்ஆதாயம் கிடைக்கும் என திட்டமிட்டு பழனிசாமி செயல்படுகிறார்.

இதற்கிடையில், கூட்டணி விஷயத்தில் கட்சியினரின் விருப்பம் அறிய, ரகசிய கருத்துக் கேட்பு நடத்தவும் ஏற்பாடுசெய்திருக்கிறார்.

அதில் பெறப்படும் கருத்துக்கள், தன் முடிவுக்கு வலுவூட்டுவதாக வே இருக்கும் என நம்பும் பழனிசாமி, வரும் வாரத்தில் தமிழகத்தின் மொத்த அரசியலும் மாறும் என்று நிர்வாகிகளிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார்.


இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -வாசகர் கருத்து (26)

 • Kanns - bangalore,இந்தியா

  Showing Loyalty to DMK for Receiving Suitcases & to Protect his Illegal Corrupt Wealth for Dividing Opposition Votes . ADMK Destroyer

 • Narayanan - chennai,இந்தியா

  பழனிச்சாமி ஒன்றை மறந்துவிட்டார் .அவர்கள் (அதிமுக) ஆளும் கட்சியாக இருந்து பஞ்சாயத்து தேர்தலில் பிஜேபி, அதிமுகவை கழட்டிவிட்டு தேர்தலில் தனியாக நின்றார்கள் .ஆகவே நீங்கள் மீண்டும் மீண்டும் கூட்டணி இல்லை என்று சொல்ல வேண்டாம். பிஜேபி ஏன் சொல்லவில்லை என்றால் உங்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லை

  • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

   எப்படி எல்லாம் முட்டு கொடுத்து மனசை ஆத்திக்க வேண்டி இருக்கு தமிழக bj கட்சி பரிதாபங்கள்

 • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

  திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உதிரிக்கட்சிகளாக இருக்கலாம் ..... ஆனால் அவற்றின் ஆதரவு இல்லை என்றால் திமுகவின் கதி அதோகதி ..... அம்போ ......

 • Narayanan - chennai,இந்தியா

  தன்னை ஒரு மண் குதிரை என்று ஒப்புக்கொண்டுள்ளார் எடப்பாடி. மக்களே இரு திராவிட கட்சிகளையும் புறக்கணிக்க முடிவிடுங்கள். இருவரும் கயவர்கள் .

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  ஆஹா, நல்ல முடிவு. அந்த முடிவில் உறுதியாக இருங்கள். அப்பத்தான் நீங்கள் தோற்கமுடியும். பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியும். ஊன்றுவது மட்டும் இல்லாமல் தேர்தலில் வெகுவாரியாக ஜெயிக்கவும் முடியும்.

  • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

   தமிழகத்தில் கால் ஊன்றுவதா??

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

   பிஜேபி தமிழகத்தில் கால் உட்பட அனைத்தையும் ஊன்றிவிட்டது.. உங்களைப்போன்ற கொத்தடிமைகளின் கதறலுக்கு அதுதான் காரணம் என்று நாங்கள் அறிவோம் ......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்