Load Image
Advertisement

பணவீக்கம் நிலையாக உள்ளது நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

 Inflation is steady, Nirmala Sitharaman announced    பணவீக்கம் நிலையாக உள்ளது  நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ADVERTISEMENT
புதுடில்லி : “சில்லரை விலை பணவீக்க விகிதம் தற்போது நிலையாக உள்ளது; தேவை மற்றும் வினியோகத்திற்கு இடையே உள்ள பொருத்தமின்மையால், தற்காலிகமாக பணவீக்கம் அதிகரிக்கிறது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சில்லரை விலை பணவீக்க விகிதம் தற்போது நிலையாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில் பணவீக்கம் தற்காலிகமாக அதிகரிப்பதற்கு காரணம், உலகளாவிய அதிர்ச்சிகளாலும், வானிலை மாற்றத்தால் ஏற்படும் தேவை மற்றும் வினியோகம் இரண்டுக்குமான பொருத்தமின்மையே ஆகும்.

நாட்டின் சில்லரை விலை பணவீக்க விகிதம், கடந்த 2022 ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் சராசரியாக 7.10 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டு இதே காலகட்டத்தில் 5.40 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரலில் 5.10 சதவீதமாக இருந்த அடிப்படை பணவீக்க விகிதம், அக்டோபரில் 4.30 சதவீதமாக குறைந்துள்ளது.


கடந்த 2016ம் ஆண்டு பணவீக்கத்திற்கான கட்டுப்பாட்டு வரம்பு அறிவிக்கப்பட்ட பின், இந்தியாவின் சில்லரை விலை பணவீக்க விகிதம் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்புகளுக்குள் உள்ளது.

அரசின் தீவிர வினியோக முன்முயற்சிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் திறமையான நடவடிக்கைகளானது, தேவை மற்றும் வினியோகத்திற்கிடையேயான பொருத்தமின்மையை தீர்க்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவியுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (8)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    விலைவாசி நித்தம் உயர்ந்த வண்ணம் உள்ளது.....

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    பணவீக்கம்னா என்னது நோட்டு வீங்கிட்டே போகுமா

  • அப்புசாமி -

    வர்ர எலக்ஷனில் இவிங்களைக் கவுக்கப் போறது பொருளாதாரமும், விலைவாசியும்தான் கோவாலு.

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    என்ன தவம் செய்தோமா இந்தம்மாவை நிதி அமைச்சராய் நாம் பெற. மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.

  • அப்புசாமி -

    மாசம் ரெண்டு லட்சமோ என்னமோ சம்பளம் வாங்குற இவரைப் போன்றவர்களுக்கு டோல் கட்டணம்.கூட செலுத்தாமல் எல்லாம் ஃப்ரீ. பணவீக்கமாவது புண்ணாக்காவது?

    • hari -

      நீ ஆராயிரம் வாங்கிட்டல்ல... நல்லா பேசு கோவாலு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement