Load Image
Advertisement

அமெரிக்க மாஜி புலனாய்வு அதிகாரி சி.பி.ஐ., அதிகாரிகளுடன் சந்திப்பு

US Ex-Intelligence Officer Meets with CBI Officials   அமெரிக்க மாஜி புலனாய்வு அதிகாரி சி.பி.ஐ., அதிகாரிகளுடன் சந்திப்பு
ADVERTISEMENT
வாஷிங்டன் : அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க மாஜி புலனாய்வு அதிகாரி இன்று இந்தியா வருகை தந்தார்.


கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதையடுத்து இந்திய -கனடா நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் மீது, கொலை முயற்சி நடந்ததாகவும், இதில், இந்திய அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. .

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும் புலனாய்வு ஏஜென்சியின் முன்னாள் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே, இன்று இந்தியா வந்தார். டில்லியில் சி.பி.ஐ., தலைமை அலுவலகம் சென்று சி.பி.ஐ., இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement