Load Image
Advertisement

திருவாரூரில் மகளுக்கு கோயில் கட்டிய தந்தை: குடமுழுக்கு நடத்தி வழிபாடு

Father who built a temple for his daughter in Tiruvarur: performed Kudamuzku and worshiped   திருவாரூரில் மகளுக்கு கோயில் கட்டிய தந்தை: குடமுழுக்கு நடத்தி வழிபாடு
ADVERTISEMENT
திருவாரூர்: திருவாரூர் புள்ளமங்கலத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் உயிரிழந்த தனது 2 வயது மகள் சக்தி பிரக்யா நினைவாக கோயில் கட்டி குடமுழுக்கு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் புள்ளமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்கு சபரி வாசன் என்ற மகனும், சக்தி பிரக்யா என்ற மகளும் இருந்தனர்.5 ஆண்டுகளுக்கு முன்பாக சக்தி பிரக்யாவுக்கு 2 வயது இருக்கும்போது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவர் அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தினந்தோறும் மகளின் நினைவுகளால் தவித்து வந்த தந்தை சவுந்தரபாண்டியன் தங்களது வீட்டு பூஜை அறையில் மகளின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து தினமும் வழிபட்டு வந்துள்ளார். மகளுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோயில் கட்டும் பணியினை தனது வீட்டிற்கு அருகில் துவங்கினார்.

தற்போது, உயிரிழந்த தனது 2 வயது மகள் சக்தி பிரக்யா நினைவாக கோயில் கட்டி குடமுழுக்கு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுந்தரபாண்டியனில் இந்த செயலை கண்டு வியந்த ஊர் மக்கள் ஒன்று கூடி கோயிலில் வழிபாடு நடத்தினர்.

தந்தை பேட்டி



இது குறித்து சவுந்தரபாண்டியன் கூறுகையில், “எனது மகள் உயிருடன் இருந்து அவளுக்கு ஒரு திருமணம் செய்தால் என்ன செலவாகும் என்பதை நினைத்து தான் இதை செய்துள்ளேன். எனக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும். ஆண்டுதோறும் தற்போது கட்டியுள்ள கோயிலுக்கு திருவிழா நடத்துவேன் என்றார்.



வாசகர் கருத்து (3)

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    மகள் மேல் அன்பு 100% சரி அதற்காக தேவையில்லாத வேலை இந்த கோயில்... அதற்க்கு பதிலாக நண்பர் நாராயணன் கூறியுள்ளதுபோல் மகள் நினைவாக பொருளாதார உதவி தேவை படும் பெண்களுக்கு உதவி செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும்...

  • Narayanan G - Chennai,இந்தியா

    மகள் நினைவாக ஒரு அரக்கட்டளை ஆரம்பித்து தேவைப்படும் பென்களுக்கு உதவி இருந்தால் பல பெண்கள் பயன் அடைந்து இருப்பார்கள் அவர்களும் போற்றி கும்பிட்டு இருப்பார்கள்

    • R S BALA - CHENNAI,இந்தியா

      இந்த ஆலயம் வழியாகவும் நீங்கள் கூறியதை செய்யலாம்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்