Load Image
Advertisement

அரசியலுக்காக வெள்ளை அறிக்கை கேட்பதா?: அமைச்சர் தங்கம் தென்னரசு

Asking for a white paper for politics?: Minister Thangam Thanarasu   அரசியலுக்காக வெள்ளை அறிக்கை கேட்பதா?: அமைச்சர் தங்கம் தென்னரசு
ADVERTISEMENT
சென்னை: அரசின் பணிகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறியிருப்பதாவது: வெள்ளம் பாதித்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். முதல்வர் அறிவித்துள்ள ரூ. 6ஆயிரம் நிவாரணம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சிலர் அரசு மீது விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னைக்கு வரவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டது. கொரோனா போன்ற பேரிடர்களை தமிழக அரசு சிறப்பான முறையில் கையாண்டது. அரசின் பணிகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அனைத்து நடவடிக்கைகளும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால்தான் உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது; தற்போதைய வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு வழங்கும் நிதியை விட தமிழகம் போன்ற பா.ஜ., ஆளாத மாநிலங்களுக்கு குறைவாக நிதி வழங்கி வருகிறது.

தமிழக அரசு கேட்டுள்ள நிதியை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கேட்டு பெற்று தர வேண்டும். வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. வெள்ள நீர் வடிகால் பணிகள் குறித்து எந்த தகவலையும் மறைக்கவில்லை. எங்களது பணிகள் வெளிப்படையாகவே நடைபெற்று வருகின்றன.

வீட்டுக் கடன் திருப்பி செலுத்தும் பொதுமக்களின் பாதிப்பு குறித்தும் ஆலோசித்து வருகிறோம். அது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியாகும். மின் பயனாளர்கள் கணக்கிடும் அட்டை சேதமடைந்து இருந்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (33)

  • பேசும் தமிழன் -

    நீங்கள் சரியாக செலவு செய்து இருந்தால்.... வெள்ளை அறிக்கை கொடுப்பதில் உங்களுக்கு என்ன கஷ்டம் ??? நீங்கள் கொடுக்க மாட்டோம் என்று கூறுவது தான் மக்களுக்கு உங்கள் மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது !!!

  • Krishna Moorthy -

    4000 கோடி என்னவாயிற்று? கார் ரேஸ் தேவையா? அதற்கு கொடுக்க பணம் இருக்கிறது. மக்களுக்கு உதவ முடியவில்லை. வெள்ளை அறிக்கை கொடுக்க ஏன் தயக்கம்?

  • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

    வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் அரசுக்கு என்ன செலவு. எப்போதும் போல அதை செய்தோம் இவ்வளவு செலவு , இதை செய்தோம் இவ்வளவு செலவு என்று எழுதி, சும்மா சட்டசபையில் படிக்கவேண்டியதுதானே.

  • கணபதி -

    தைரியம் இருந்தால் வெள்ளை அறிக்கை கொடுக்கலாமே. ஏன் தயக்கம். பயம்.

  • Bala - singapore,சிங்கப்பூர்

    சர்க்கரையையும் சாக்கையும் கறையான்கள் ( திருட்டு திராவிடர்கள் ) சாப்பிட்ட மரபணு எப்படி தமிழர்கள் நம்புபது ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement