Load Image
Advertisement

சிறப்பு அந்தஸ்து தொடர்பான தீர்ப்பு: காஷ்மீர் மன்னர் மகன் கரண் சிங் வரவேற்பு

 Judgment on Special Status: Karan Singh, son of the King of Kashmir welcomed  சிறப்பு அந்தஸ்து தொடர்பான தீர்ப்பு: காஷ்மீர் மன்னர் மகன் கரண் சிங் வரவேற்பு
ADVERTISEMENT
புதுடில்லி: சிறப்பு அந்தஸ்து தொடர்பான தீர்ப்பை வரவேற்கிறேன் என முன்னாள் காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் மகனும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கரண் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: சட்டப்பிரிவு 370வை அரசியலமைப்பு விதிப்படி ரத்து செய்யப்பட்டது செல்லுப்படியாகும் என்பது தெளிவாகி விட்டது. ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட போது மக்கள் வருத்தப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் சிறப்பான வரலாறு கொண்டது.

நானும் இந்த மண்ணை சேர்ந்தவன் தான். காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறி போனது வருத்தம் தான். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கிறேன். மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டு கொள்கிறேன்.

நான் இப்போது ஓர் ஆலோசனை சொல்வேன். அதிருப்தியாளர்கள் தங்களுடைய ஆற்றல் அனைத்தையும் வரும் தேர்தலுக்கு தயாராவதில் திருப்ப வேண்டும். எந்த எதிர்மறையான எண்ணங்களையும் வளர்த்துக் கொள்ளாமல் மக்களைத் தேர்தலுக்கு உத்வேகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (4)

 • canchi ravi - Hyderabad,இந்தியா

  முதலில் காஷ்மீரை விட்டு வெளியேற்றப்பட்ட ஹிந்துக்களை தம் தம் இல்லங்களில் குடிபெயர வழி செய்யுங்கள்.

 • Gopalan - ,

  முன்பு காஷ்மீரில் இந்துக்கள் நிம்மதியாக வாழ முடியாமல் தவித்தனர். பல இந்துக்கள் காஷ்மீரை விட்டு வெளியேறினர். இது வரலாறு. அதற்கு யாரும் சவால் விட முடியாது. இப்போது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின்படி ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தியாவின் எந்த மூலையிலும் வாழ உரிமை உள்ளது.

 • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

  உங்கப்பாரு நெனச்சிருந்தா பல லட்சக் கணக்கான இந்த நாட்டு மக்களின் ரத்தம் சிந்தியிருக்காது+ அவர்கள் அனாதையாக்கப் பட்டு நாடோடிகளாகப் போயிருக்க மாட்டாங்க++முதல் கோணல் முற்றும் கோணல்.

 • Ganapathy Subramanian - Muscat,ஓமன்

  மற்றவர்களை விட மிகுந்த நஷ்டம் அடைந்தவர் இவர்தான். நிஜமாகவே ஆண்ட பரம்பரை. ஆனால் தற்போது அங்கே டெபாசிட் கூட கிடைக்காமல் போகும். மதம் மாறிகளால் காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டு சொந்த மாநிலத்தைவிட்டு அகதிகளாய் பிற மாநிலங்களுக்கு துரத்தப்பட்டவர் அதிகம். அவர்க்ஜளால் மிகவும் வரவேற்கப்படும் தீர்ப்பு. அவர்களின் பாதுகாப்பை காஸ்மீரில் மத்திய அரசு உறுதிப்படுத்தவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்