Load Image
Advertisement

ஜம்மு காஷ்மீர் குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: தலைவர்கள் கருத்து

Article 370:Supreme Court verdict on Jammu and Kashmir: Leaders welcome  ஜம்மு காஷ்மீர் குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: தலைவர்கள் கருத்து
ADVERTISEMENT

ஏமாற்றம் தான்!உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் தான். ஆனால், மனம் தளரவில்லை. எங்களின் போராட்டம் தொடரும். தற்போது இந்த இடத்துக்கு வரவே, பா.ஜ.,வுக்கு பல ஆண்டுகள் ஆகின. எனவே, நாங்களும் நீண்ட துாரத்துக்குச் செல்ல தயாராகவே இருக்கிறோம்.
- ஒமர் அப்துல்லா,முன்னாள் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி.

பாராட்டுக்குரியது!உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பாராட்டுக்குரியது. வலுவான இந்தியாவும், உறுதியான அரசும் இணைந்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை விரைவில் விடுதலை செய்யும் என, நம்புகிறோம்.அலோக் குமார் செயல் தலைவர், விஸ்வ ஹிந்து பரிஷத்.

நிலையான வளர்ச்சி!பாரதத்தின் ஒருமைப்பாடு வலுவடைந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில், நிலையான அமைதியை நிலைநாட்டவும், பிராந்தியத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் பா.ஜ., அரசு உறுதிபூண்டுள்ளது.அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

உடனடியாக தேர்தல் தேவை!உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் வாயிலாக, ஜம்மு - காஷ்மீர் தொடர்பான சில பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், சில பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. எப்படியிருந்தாலும், ஜம்மு - காஷ்மீரில் உடனடியாக சட்டசபை தேர்தலை
நடத்துவதுடன், மாநில அந்தஸ்தையும் உடனடியாக அளிக்க வேண்டும். சிதம்பரம்முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்

வரலாற்று பணியை அரசு செய்துள்ளதுஉச்ச நீதிமன்ற தீர்ப்பை பா.ஜ., வரவேற்கிறது. இதன் வாயிலாக, ஜம்மு - காஷ்மீரை நாட்டின் முக்கிய சித்தாந்தத்தில் சேர்க்கும் வரலாற்றுப் பணியை பிரதமர் மோடி அரசு செய்துள்ளது. நட்டா பா.ஜ., தேசிய தலைவர்.

மகிழ்ச்சி இல்லை!உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இந்த தீர்ப்பால், ஜம்மு - காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி அடையவில்லை. எனினும் நாம் அதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.
குலாம்நபி ஆசாத்தலைவர், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி

இந்தியர்கள் மகிழ்ச்சி!ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், பிரதமர் மோடி எடுத்த முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வரலாற்றுத் தீர்ப்பு ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடையச் செய்யும். தற்போது, வளர்ச்சியின் புதிய சகாப்தத்தில், ஜம்மு - காஷ்மீர் நுழைந்துள்ளது.
ராஜ்நாத் சிங்ராணுவ அமைச்சர், பா.ஜ.,

போராட்டம் தொடரும்!உச்ச நீதிமன்ற தீர்ப்பால், ஜம்மு- - காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கவோ, கைவிடவோ போவதில்லை. மரியாதை மற்றும் கண்ணியத்துக்கான எங்களது போராட்டம் தொடரும். மெஹபூபா முப்திதலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
வாசகர் கருத்து (58)

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  உச்சநீதிமன்ற அமர்வுக்கு தெரியாத சட்டமா, அல்லக்கைகளுக்கு தெரிந்துவிட போகிறது ? அதுவும் ஐந்துபேர் அமர்வு ஆயிற்றே. சட்ட அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு தான் தெரியும், இது தற்காலிக நிவாரணம், இந்தியாவின் ஒரு பகுதி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே அதுவும் முதலிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று. இதுதான் அடிப்படை ஆதாரம். திராவிட அல்லக்கைகள் தொல்லை தாங்க முடியவில்லை. தனக்கும் தெரியாது, விஷயம் தெரிந்தவர் சொன்னாலும் புரியாது. இவர்களுக்கு தெரிந்தது எல்லாம், குளிர்ச்சியான மப்பும், சூடான பிரியாணியும் தான்.

 • பேசும் தமிழன் -

  தமிழக திருட்டு திராவிட மாடல் ஆட்கள் மற்றும் அதன் அல்லக்கைகள்.... மக்கள் உங்களை கழுவி ஊற்ற காத்து கொண்டு இருக்கிறார்கள்.

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  ஜம்மு - காஷ்மீரில் உடனடியாக சட்டசபை தேர்தலை நடத்துவதுடன், மாநில அந்தஸ்தையும் உடனடியாக அளிக்க வேண்டும என்று முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர், ...இதுக்கு இங்குள்ள விடியல் திராவிடனுங்க என்ன பதில்?? ....காங்கிரஸ் கட்சியை கூட்டணியை விட்டு விடியல் திராவிடனுங்க வெளியேற்றட்டும் ....

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு...இது பிடிக்கவில்லை என்றால் இங்குள்ள விடியல் தி மு க திராவிடனுங்க பாக்கிஸ்தான் இடம் பெயர்ந்து சொல்லலாம் .....

 • R SRINIVASAN - chennai ,இந்தியா

  இந்த தீர்ப்பை குறை சொல்பவர்கள் சீனாவில் சித்ரவதைய் அனுபவிக்கும் உய்க்கர் முஸ்லிம்களுக்காக போராடுவார்களா ?கபில் சிபல் ,சிதம்பரம் மற்றும் சீனாவின் நண்பர்களான ராகுல் காந்தி கம்ம்யூனிஸ்ட்கள் சீனா சென்று இதுக்காக போராடுவார்களா ? ஆகவே பாரத மக்களே இனி மோடியும் அமித்ஷாவும்தான் இந்தியாவின் விடிவுகாலம் .வரும் தேர்தலில் மோடி அவர்கள் 450 இடங்கள் பெற்று வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement