Load Image
Advertisement

வீடு திரும்பினார் விஜயகாந்த்: மருத்துவமனை அறிக்கை

 Vijaykanth returned home: Hospital report   வீடு திரும்பினார் விஜயகாந்த்: மருத்துவமனை அறிக்கை
ADVERTISEMENT
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கடந்த நவ.,18-ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நலமுடன் இருப்பதாக கட்சி பொருளாளர் பிரேமலதா, விஜயகாந்த் உடன் இருக்கும் படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றி கட்சி தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி வந்தார்.
இந்நிலையில் மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்' எனக் கூறப்பட்டுள்ளது.



இதனையடுத்து, அவரது தொண்டர்கள், ரசிகர்கள் பலரும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், விஜயகாந்திற்கு ஒன்றும் ஆகாது; அவர் இன்னும் 100 வருடம் ஆரோக்கியமாக இருப்பார் என ஆனந்த கண்ணீர் விடும் அவர்கள், இனிமேல் தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து (12)

  • DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ

    மது, கஞ்சா புகைப்பிடித்தால் போன்ற பழக்கங்கள் இல்லாமல் இருந்தால் சரி.

  • vaiko - Aurora,பெர்முடா

    விஜகாந்த்தை வைத்து அவரது குடும்பம் அரசியலில் சம்பாதிக்க னேநெய்ப்பது மிகவும் கேவலம். இப்போதெல்லாம் பிரேமா தம்பியின் தலையை வெளியே பார்க்கவே முடிவதில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பே விஜயகாந்த் அவர்களில் உடல் வலுவிழந்து விட்டது. அவரால் யாரும் பிடிக்காமல் நிற்க, ஏன் உட்கார கூட முடியாது. இனியும் பழையபடி வருவார் என்பதெல்லாம் பீலா. பாக்யராஜ், ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார் கட்சி போல தேமுதிகவும் அழிந்து விடும். இது இயற்கையின் நியதி.

  • kulandai kannan -

    கட்சியைக் கலைத்தால் புண்ணியமாகும்.

  • Jayaraman Ramaswamy - Chennai,இந்தியா

    He was a great man. Drinking habit and surrounding people, ruined his life.

  • duruvasar - indraprastham,இந்தியா

    கடவுளுக்கு நன்றி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்