Load Image
Advertisement

நாம சங்கீர்த்தன விழா: பாகவதர்களுக்கு விருது

 Nama Sankirtana Festival: Award to the Bhagavathas    நாம சங்கீர்த்தன விழா: பாகவதர்களுக்கு விருது
ADVERTISEMENT
தி.நகர்: இண்டகிரேடட் அகாடமி பார் பர்பார்மிங் ஆர்ட்ஸ், கிருஷ்ண கான சபா மற்றும் பாகவத சேவா டிரஸ்ட் இணைந்து நடத்தும், நாம சங்கீர்த்தன விழா -- 2023, தி.நகர் கிருஷ்ண கான சபாவில் கடந்த 6ம் தேதி துவங்கியது.

இதையொட்டி, தினமும் காலை முதல் மாலை வரை, பல்வேறு பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு, மருதாநல்லுார் கோதண்டராம சுவாமிகள் முன்னிலையில், ஸ்ரீ ராதா கல்யாண உத்சவம் நடந்தது.

பின், மாலை 4:00 மணிக்கு, நாம சங்கீர்த்தனத்திற்கு பல ஆண்டுகளாக தொண்டு செய்து வரும் பாகவத பெரியோர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இதில், புதுக்கோட்டை நரசிம்ம பாகவதருக்கு, 'சங்கீர்த்தன கலாநிதி' மற்றும் பாலசுப்ரமணிய பாகவதருக்கு 'சங்கீர்த்தன சூடாமணி' விருதை, மதுரை ஸ்ரீசக்ர ராஜ ராஜேஷ்வரி பீடம் ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.

தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு மும்பை சுந்தர்ராம பாகவதர் மற்றும் குழுவினர் ஆஞ்சநேய உத்சவம் நடந்தது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொளி வாயிலாக பங்கேற்றார்.

விழாவில், பாகவத சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கல்யாணராம பாகவதர், ஸ்ரீராம் குழும இயக்குனர் சுந்தரேசன், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி, கிருஷ்ண கான சபா செயலர் பிரபு மற்றும் கிருஷ்ண கான சபா முதன்மை நிர்வாக அதிகாரி சாஷ்வதி ஆகியோர் பங்கேற்றனர்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:

பாகவத சேவா டிரஸ்ட் சார்பில், பாகவதர்களுக்கு செய்து வரும் உதவிகள் தொடர வேண்டும். ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதையடுத்து, மாநிலத்தில் உள்ள பழமையான ராமர் கோவில்களில், அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (4)

  • Neutrallite - Singapore,சிங்கப்பூர்

    ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது எல்லா ராமர் கோயில்களிலும் சிறப்பு பூஜை என்பது மிக நல்ல விஷயம். அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் ராமர் என்றால் ஏதோ வடநாட்டு விஷயம் என்றும், இங்க முருகன் மட்டுமே என்றும் ஒரு விஷம எண்ணம் விதைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் அவ்வாறு இல்லை, நகர நவீன மக்கள் சிலர் தான் இதை நம்ப தொடங்கி உள்ளனர். அதற்கு சீமான் போன்றோரும் காரணம்.

  • Godyes - Chennai,இந்தியா

    இனி இது போல் எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதில் இந்துவின் சனாதனம் உணர்த்துவது அவசியம்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ராம ராம ராம ராம ராம ராம கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ராம ராம ராம ராம ராம ராம கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ராம ராம ராம ராம ராம ராம கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ராம ராம ராம ராம ராம ராம கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ராம ராம ராம ராம ராம ராம கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ராம ராம ராம ராம ராம ராம கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ராம ராம ராம ராம ராம ராம கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண

  • venkatasubramanian - coimbatore,இந்தியா

    நமஸ்காரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்று தாங்கள் மாற்றவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்