Load Image
Advertisement

மாயாவதிக்கு பின் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் யார்?

In Big Move Ahead Of 2024, Mayawati Names Nephew, 28, Political Successor மாயாவதிக்கு பின் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் யார்?
ADVERTISEMENT
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, உறவினரான ஆகாஷ் ஆனந்தை(28) தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். தனக்கு பிறகு கட்சியை ஆகாஷ் வழிநடத்துவார் எனக்கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி. உ.பி., மாநில முன்னாள் முதல்வர். வாரிசு அரசியலுக்கு பெயர் போன இவர், கடந்த 2019 ம் ஆண்டு தனது சகோதரர் ஆனந்த் கடந்த 2019ம் ஆண்டு கட்சியின் துணைத்தலைவராகவும், ஆகாஷ் ஆனந்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்து அவரது கட்சியினருக்கு அதிர்ச்சியை அளித்தார்.

2019 ம் ஆண்டு முதல் அரசியலில் இணைந்த ஆகாஷ் ஆனந்த், மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் இணைந்து காணப்பட்டார். அதற்கு முன்னர் 2017ம் ஆண்டு மாயாவதிக்கு ஆதரவாக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 2019ம் ஆண்டு மாயாவதி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்கு ஆதரவாக தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த் இருப்பார் எனவும், தனக்கு பிறகு அவர் தான் கட்சியை வழிநடத்துவார் எனவும் மாயாவதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்தும் பொறுப்பை ஆகாஷ் ஆனந்த்திற்கு மாயாவதி வழங்கி உள்ளார். தனக்கு பிறகு, ஆகாஷ் தான் கட்சியை வழிநடத்துவார் எனவும் அறிவித்துள்ளார் என்றார்.


வாசகர் கருத்து (4)

  • Venkataraman - New Delhi,இந்தியா

    மீண்டும் குடும்ப வாரிசுகள் கட்சித்தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுகிறார்கள். மாயாவதி அவர்கள் இந்த கட்சிக்கு தலைவராவதற்கு முன்பு கான்சிராம் என்பவர் தலைவராக இருந்தார்.

  • முருகன் -

    இன்றைய காலகட்டத்தில் வேறு யாருக்காவது பதவியை கொடுத்தால் கட்சியை அடுத்த கட்சியிடம் அடகு வைத்து விடுவார்கள் அல்லது இனைத்து விடுவார்கள்

  • S. Gopalakrishnan -

    இவர் முகத்தை பார்த்தால் சுகவாசி போல தெரிகிறது ... ஒடுக்கப்பட்ட மக்களை வழிநடத்தும் தலைவராக தெரியவில்லை ...

  • விடியல் - ,

    அடுத்து ஒரு குடும்ப வாரிசு கட்சி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்