Load Image
Advertisement

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Semi-annual exams in Tamil Nadu postponed to 13th Dec   தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் நாளை(டிச.,11) துவங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை துவங்க விருந்த அரையாண்டுத் தேர்வுகள் டிச.,13ம் தேதிக்கு தள்ளி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அரையாண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவைணயை வெளியிடவும், 4 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை தூய்மை செய்ய ரூ.1.90 கோடி ஒதுக்கீடு செய்தும், நாளை மறுநாளுக்குள் 4 மாவட்டங்களிலும் பாடப்புத்தகங்கள், பள்ளிச்சீருடைகள் ஆகியவற்றை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய அட்டவணை



இந்நிலையில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான புதிய அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. டிச.,13 முதல் 22ம் தேதி வரை தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.



வாசகர் கருத்து (1)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்த குழப்பமான சூழலில்,எல்லாருக்கும் மன உளைச்சல் மிக அதிகமாக இருக்கும் இந்த மாதிரி சமயத்தில் அரையாண்டுத் தேர்வு அவசியமா? கட்டாயம் நடத்தித் தான் ஆகணுமா? அரையாண்டுத் தேர்வை முற்றிலும் ரத்து செய்யுங்கள் ,ஒன்றும் குடி மூழ்கிவிடாது ...பத்தாம் வகுப்பைத் தவிர அனைவரையும் முழு ஆண்டுத் தேர்வில் கூட பாஸ் என்றும் அறிவிக்கலாம்,,,,.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement