Load Image
Advertisement

மர்மமான முறையில் இறந்த லாரி கிளீனர் உடல் தோண்டி எடுப்பு

 Exhumed body of mysteriously dead Larry Kleiner    மர்மமான முறையில் இறந்த லாரி கிளீனர் உடல் தோண்டி எடுப்பு
ADVERTISEMENT


விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மர்மமான முறையில் இறந்தவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சிறுவாலை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 48; லாரி கிளீனர். இவர், கடந்த 6ம் தேதி இரவு 7:30 மணியளவில் அப்பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திடலில் நிறுத்தியிருந்த லாரியை பின்நோக்கி எடுத்தார். அப்போது, மின் கம்பத்தில் லாரி மோதியதில், மின் விநியோகம் தடைபட்டது.

இதனால், அப்பகுதி மக்கள் மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். அன்று இரவு மணிகண்டன், அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 7ம் தேதி மணிகண்டன் உடலை உறவினர்கள் சிறுவாலை சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். மணிகண்டனுக்கு லீலா, 42; என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், மணிகண்டன் கொலை செய்யப்பட்டதாக, கடந்த 2 நாட்களாக கிராமத்தில் செய்தி பரவியது.

இதையடுத்து, வி.ஏ.ஓ., வேல்முருகன், போலீசில், மணிகண்டன் சாவில் சந்தேகம் இருப்பதாக நேற்று புகார் அளித்தார்.

அதன்பேரில், கெடார் போலீசார் வழக்கு பதிந்தனர். பிற்பகல் 2:30 மணியளவில் விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், இன்ஸ்பெக்டர் சேகர் முன்னிலையில் மணிகண்டன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement