Load Image
Advertisement

கடலுார் ஏ.டி.எம்., மையத்தில் சாணம் பூசும் வீடியோ வைரல்

 Cuddalar ATM, central video goes viral    கடலுார் ஏ.டி.எம்., மையத்தில் சாணம் பூசும் வீடியோ வைரல்
ADVERTISEMENT


கடலுார் : கடலுார் ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர், மாட்டு சாணம் பூசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வேட்டி, சட்டை அணிந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், ஏ.டி.எம்., மையத்தில் மாட்டு சாணத்தை பூசும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.

கடலுாரில் போலீசார் விசாரணை நடத்தியதில், திருப்பாதிரிபுலியூர் காவல் சரகத்திற்குட்பட்ட பாதிரிக்குப்பத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., மையத்தில், இயந்திரம், கதவு, கண்ணாடிகள் மீது மாட்டு சாணம் பூசியிருப்பது தெரிந்தது.

இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும், ஏ.டி.எம்., மையத்தில் இருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மாட்டு சாணம் பூசிய நபர் யார், எதற்காக பூசினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கடலுார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement