Load Image
Advertisement

டைல்ஸ் ஷோரூம் எரிந்து ரூ.25 லட்சம் சேதம்

 Tiles showroom caught fire causing damage of Rs 25 lakh    டைல்ஸ் ஷோரூம் எரிந்து ரூ.25 லட்சம் சேதம்
ADVERTISEMENT


பண்ருட்டி : பண்ருட்டி அருகே, மின்கசிவு காரணமாக, டைல்ஸ் ஷோரூமில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

பண்ருட்டி அடுத்த புதுப்பிள்ளையார்குப்பம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள டைல்ஸ் ஷோரூமில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு அலுவலர்கள் வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும், கடையில் இருந்த பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமானது. சேத மதிப்பு 25 லட்சம் ரூபாய் என, கூறப்படுகிறது.

இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement