Load Image
Advertisement

டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி? வடலுார் நகராட்சி முற்றுகை



வடலுார் : காய்ச்சலுக்கு பெண் பலியானதை தொடர்ந்து, வடலுார் நகராட்சியை கிராம மக்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், வடலுார் அருகே தென்குத்து புதுநகர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். டைலர். 30 வயதுள்ள இவரது மனைவி, கடந்த 4ம் தேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

வடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வடலுார் நகராட்சி குப்பைகள் தென்குத்து பகுதியில் கொட்டப்படுவதால், கொசு உற்பத்தியாகி, காய்ச்சல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந் நிலையில், பெண் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று காலை, ஊராட்சி தலைவர் வைத்தியநாதன் தலைமையில், வடலுார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு வந்த வடலுார் சேர்மன் சிவக்குமாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக சேர்மன் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement