Load Image
Advertisement

மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் அபாயம்; ஆபத்தை உணராமல் அனைவரும் கொர்...

 Sunday page * Students, youths are at risk of degeneracy * Without realizing the danger, everyone is...     மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் அபாயம்;   ஆபத்தை உணராமல் அனைவரும் கொர்...
ADVERTISEMENT


புதுச்சேரியில் கஞ்சா சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. வேலைக்கு செல்லாமல் சுற்றி வரும் இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். தற்போது நிலைமை மோசமாகி பள்ளி, கல்லுாரிகள் மாணவர்களும் கஞ்சா போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர்.

குறிப்பாக, டாக்டர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்கும் மருத்துவ மாணவர்கள், பொறியியல் படிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்றவர்கள் மத்தியிலும் கஞ்சா மட்டுமல்லாமல் போதை பொருள் பழக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது.

கஞ்சா புகைத்து கொண்டு படித்தால் அதிக ஞாபக சக்தி கிடைக்கும் என்ற தவறான தகவல்கள் மருத்துவ மாணவர்கள் மத்தியில் உலா வருகிறது.கஞ்சா புகைத்தால் மூளையில் உள்ள செல்கள் அழிந்து விடும், இதனால் ஞாபக சக்திக்கு பதில் நரம்பு தளர்ச்சி தான் ஏற்படும் என போதை பொருள் தடுப்பு பிரிவு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., படிப்பை பாதியில் நிறுத்திய வாலிபர், பயிற்சி மருத்துவர்கள் 2 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.அதற்கு அடுத்த சில நாட்களிலேயே புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.டி.எம்.ஏ. (மெத்திலின் டையாக் மெத்தம்மிட்டமைன்) என்ற போதை பொருள் வைத்திருந்த சட்டக் கல்லுாரி மாணவர், பல்கலைக்கழக மாணவர்கள், ஐ.டி. சாப்ட்வேர் ஊழியர் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இப்படி மாணவ சமூதாயத்தில் கஞ்சா, எம்.டி.எம்.ஏ., போன்ற போதை பொருட்கள் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துள்ளது. எனவே, புதுச்சேரி அரசு ஒவ்வொரு கல்லுாரியிலும் போதை பொருள் தடுப்பு கமிட்டி அமைத்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கும் மாணவர்களை கண்டறிந்து, மறுவாழ்வு கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீசாருக்கும் பிள்ளைகள் உள்ளனர்...

கஞ்சா, போதை பொருட்கள் எப்படி எல்லாம் புதுச்சேரிக்குள் எடுத்து வரப்படுகிறது என்ற 'நெட்வொர்க்' போலீசாருக்கு நன்றாகவே தெரியும். இவற்றை போலீசார் தடுக்கவில்லை என்றால், சட்டம் ஒழுங்கு சீரழிந்து சமுதாயம் பாழாகும்.இது, எதிர்காலத்தில் போலீசாருக்குதான் தலைவலியாக அமையும்.மேலும், போலீசாருக்கும் பிள்ளைகள் உள்ளனர்; அவர்களும் பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர். கஞ்சா, போதை பொருட்களால் தங்களது பிள்ளைகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதை போலீசார் உணர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இரும்பு கரம் கொண்டு போதை பொருள் நெட்வொர்க்கை ஒடுக்க வேண்டும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement