Load Image
Advertisement

கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க ஏற்பாடு ; போடி, உத்தமபாளையம் தாலுகாக்களில் அறிமுகம்

 Provision of provision of ration items through Ukriji registration; Introduction in Bodi and Uttamapalayam taluks    கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்க  ஏற்பாடு ;   போடி, உத்தமபாளையம் தாலுகாக்களில் அறிமுகம்
ADVERTISEMENT


மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்.,எனும் விற்பனை முனைய கருவிகள் மூலம் கைரேகை பதிவு செய்து பொருட்கள் வழங்கும் நடைமுறை 2007 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. முன்பு புத்தக வடிவில் இருந்த ரேஷன் கார்டுகள் டிஜிட்டல் முறையில் க்யூ.ஆர்., கோடுடன் கார்டு ஆக வழங்கப்பட்டன. கார்டை விற்பனை முனைய கருவியில் ஸ்கேன் செய்து ரேஷன்கார்டில் பெயர் உள்ள ஒருவரின் ரேகை பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.

சில பயனாளிகளின் கைரேகைகள் மறைந்திருந்தால் விற்பனை முனையத்தில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு பொருட்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன் வழங்கிய விற்பனை முனைய கருவி 2 ஜி தகுதியில் இருந்ததால் நெட் வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு 'அப்டேட்' செய்ய கோரினர். தற்போது மாநில அரசு புதிய விற்பனை முனைய கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த கருவியில் 4ஜி சேவையை பயன்படுத்தும் வகையில் ரேஷன்கார்டு ஸ்கேன் செய்தல், பயோ மெட்ரிக்பதிவு, ரசீது வழங்கும் இயந்திரம், டிஸ்பிளே உள்ளிட்ட வசதிகளுடன் 4ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவியுடன் கருவிழி மூலம் பதிவு செய்யும் இயந்திரமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கைரேகை பதிவு செய்ய இயலாதவர்களுக்கு கருவிழியை பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வாங்கி செல்ல இயலும்.

மாவட்டத்தில் போடி, உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட 70 ரேஷன் கடைகளில் இக்கருவிகள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. தேனி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமையில் நடந்த முகாமில் 70 ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு புதிய கருவிகளை பயன்படுத்துவது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. அக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட பழைய விற்பனை முனையங்கள் திரும்ப பெறப்பட்டு, புதிய விற்பனை முனையம், கருவிழி பதிவு கருவிகள் வழங்கப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில், 'கைரேகை பதிவு செய்ய இயலாதவர்களுக்கு கருவிழி பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்க இயலும்.

கருவிழி பதிவு செய்யும் முறை அனைத்து மாவட்டங்களிலும் 70 ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகறிது.

இம்முறையில் ஆதார் பதிவு செய்த பின் கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களாக இருந்தால் கருவிழியை ஆதாரில் புதுப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள மற்ற கடைகளுக்கும் இம் முறை படிப்படியாக அமல்படுத்தப்படும்' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement