Load Image
Advertisement

வெடி மருந்தில் விதிமீறல் இல்லை: தேவசம்போர்டு தலைவர் தகவல்

 No Violation in Explosives Devasom Board Chairman Information Devasom Board Chairman Information    வெடி மருந்தில் விதிமீறல் இல்லை:  தேவசம்போர்டு தலைவர் தகவல்
ADVERTISEMENT
சபரிமலை: ''சபரிமலையில் வெடி மருந்து பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதில், எந்த விதிமீறலும் நடைபெறவில்லை,'' என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார்.

கடந்த ஆண்டு மாளிகைபுறத்து அம்மன் கோவில் அருகே வெடி வழிபாடு நடைபெறும் இடத்தில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, சபரிமலை மற்றும் மாளிகைபுறத்தில் வெடிவழிபாடு முழுமையாக நிறுத்தப்பட்டது. மீதியிருந்த வெடி மருந்து சன்னிதானத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இது விபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், வெடி மருந்து வைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

வெடி மருந்து பாதுகாத்து வைத்திருப்பதில் எந்த விதி மீறலும் இல்லை. கோவிலில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில், 100 அடி ஆழத்தில் வெடிமருந்து பாதுகாத்து வைக்கப்பட்டுஉள்ளது.

வெடிமருந்து லைசென்ஸ் சபரிமலை நிர்வாக அதிகாரிக்கும், குத்தகைதாரருக்கும் உள்ளது. சீசன் தொடங்கியுள்ளதால் தற்போது இந்த வெடி மருந்துகளை அப்புறப்படுத்த முடியாது.

சீசன் முடிந்தவுடன் வனத்துறையுடன் ஆலோசனை நடத்தி, முழுமையாக அப்புறப்படுத்தப்படும். வெடி மருந்து பாதுகாப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்