Load Image
Advertisement

தி.மு.க.,வை பாராட்டும் பா.ஜ.,

 BJP praises DMK  தி.மு.க.,வை பாராட்டும் பா.ஜ.,
ADVERTISEMENT
புதுடில்லி: வாயை கொடுத்து மாட்டிக் கொள்வதில், தி.மு.க.,விற்கு இணை யாரும் இல்லை. சமீபத்தில், பா.ஜ., வெற்றி பெற்ற வட மாநில மக்களை, 'பசு மூத்திரம் குடிப்பவர்கள்' என, கிண்டலாக பார்லிமென்டில் தர்மபுரி எம்.பி., செந்தில் குமார் பேசினார்; இது பெரும் பிரச்னையானது. கடைசியில், தன் வார்த்தைகளை 'வாபஸ்' பெற்றதுடன், மன்னிப்பும் கேட்டார் தி.மு.க., - எம்.பி.,

மன்னிப்பு கேட்பதற்கு முன் என்ன நடந்தது... எதிர்க்கட்சிகள் கூட்டணியிலிருந்து, இரண்டு முக்கிய நபர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தொடர்பு கொண்டு, சபையில் நடந்தவற்றைக் கூறி, 'நம் கூட்டணிக்கு இது பெரும் பிரச்னையை உண்டாக்கும்; இதில் பா.ஜ., குளிர்காயும்' என கூறினராம்.

தன் பேச்சை முடித்துக் கொண்டு, வீட்டிற்கு செல்வதற்குள், செந்தில்குமாருக்கு முதல்வரிடமிருந்து பல போன்கள் வந்து விட்டதாம். 'உடனே மன்னிப்பு கேளுங்கள்' என, உத்தரவிட்டார் ஸ்டாலின்.

என்ன தான் மன்னிப்பு கேட்டாலும், இந்த விவகாரத்தை பா.ஜ., விடுவதாக இல்லை. தக்க சமயத்தில், அதாவது, 2024 தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்த உள்ளதாம்.

'ஏற்கனவே, 'சனாதனத்தை ஒழிப்பேன்' என, உதயநிதி பேசியதை சொல்லி, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எங்களுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தது; தற்போது, தி.மு.க.,வினரின் இந்த பசு மூத்திரம் விவகாரம். ஒரு பக்கம் ராகுலின் உளறல், இன்னொரு பக்கம், தி.மு.க.,வின் ஹிந்து எதிர்ப்பு பேச்சு. எங்களுக்கு நல்லது' என, மகிழ்ச்சியில் உள்ளதாம் பா.ஜ., தலைமை.


வாசகர் கருத்து (22)

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  எருமை மாட்டின் மீது மழை பெய்தால் என்ற சொலவடைக்கும் செந்தில் குமார் , ஆ ராசா உதயநிதி போன்றோரின் பேச்சுகளும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக தோன்றுகிறது

 • M.S.Jayagopal - Salem,இந்தியா

  ஸ்டாலின் செந்திகுமாரிடம் போனில் கண்டித்து பேசியபொழுது செந்தில்குமாருக்கு எங்கோ நனைந்து இருக்கும்.

 • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

  இதெல்லாம் பார்த்தல் திமுகவிற்கு பாஜகவிற்கு ஒரு உள்குத்து ஒப்பந்தம் இருக்குமான்னு தோணுதே

  • enkeyem - sathy,இந்தியா

   உல் குத்து, வெளி குத்து எதுவும் இல்லை. தி மு க வுக்கு பத்து வருடங்களுக்கு அப்புறம் ஜெயித்து விட்டோம் என்கிற மமதையில் தலைக்கனம் பிடித்து என்ன பேசுவதென்றே தெரியாமல் உளறிக்கொட்டி விடுகிறார்கள். அதுவே அவர்களுக்கு பாதகமாக முடிந்து விடுகிறது. போதாக்குறைக்கு ஜால்றா ஊடகங்கள் முரட்டு முட்டு. கர்மா நன்றாகவே வேலை செய்கிறது .

  • DVRR - Kolkata,இந்தியா

   உள்குத்து இப்படி இருக்கின்றது - திமுக எந்த அளவுக்கு பப்பு எந்த அளவுக்கு அறிவிழந்து உளறுகின்றார்களோ அந்த அளவுக்கு பிஜேபி புகழ் மேலே மேலே போகும்

 • Mohan - Salem,இந்தியா

  ஆமாம். இந்திய அரசியலமைப்பு சட்டம் பேச்சுரிமை தந்தது எதற்கு ? எந்த கடவுளை நம்பவும், வணங்கவும், எந்த நம்பிக்கையின் படியும் வாழ்க்கையை சட்டத்தை மதித்து நடக்க, அரசியல் அமைப்பு சட்டம் வழி வகுத்துள்ளது. இந்துவாக பிறந்து இந்து கடவுளின் பெயர் கொண்ட இந்த எம். பி. தன்மானம் கொண்டவராக இருந்தால், (பசு மூத்திரத்தை) கோமியத்தை புனிதமாக கருதும் கட்சி ஆட்சி செய்யும் போது அவர்""" பசு மூத்திர மாநிலங்களிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியாளர்களிடமிருந்து """வாழ்நாள் எம். பி. பென்ஷன்"" வாங்காமல் இருந்தால்....மானஸ்தன்....

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  சாதாரணமாகவே ஆட்சிக்கு வந்து இரண்டு வருசங்களில் தீம்கா செய்கிற ஊழல்களால் தன பெயரை நாறடித்துக்கொள்ளும். 71 இல் ஆட்சிக்கு வந்து 73 இல் டெபாசிட் இழந்தார்கள். 96 இல் ஆட்சிக்கு வந்து 98 தேர்தலில் தோற்றார்கள். 2006 இல் ஆட்சியை பிடித்து 2009 இல் தோற்றத்தோடில்லாமல், 2011 இல் அடியோடு வேரறுக்கப்பட்டார்கள். இந்த முறையும் விதிவிலக்கல்ல. ரெண்டு வருசதுக்கப்புறமே மக்கள் எப்போ தேர்தல்வரும்னு காத்துட்டு இருப்பாங்க. ஜெயலலிதா இருந்தவரை மாற்றாக உறுதியான தலைமை இருந்ததால் அவருக்கு வோட்டளித்தார்கள், இப்போ வரும் தேர்தலில் அண்ணாமலைக்கு ஏகபோகமாக வாக்களிக்கப்போகிறார்கள். அவர் வந்தபிறகாவது நாடு சீரடைந்தால் நல்லது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்