Load Image
Advertisement

பாஸ்போர்ட் விசாரணைக்கு சென்ற பெண் துப்பாக்கி குண்டு பாய்ந்து கவலைக்கிடம்

 The woman who went to the passport inquiry was shot and worried    பாஸ்போர்ட் விசாரணைக்கு சென்ற பெண் துப்பாக்கி குண்டு பாய்ந்து கவலைக்கிடம்
ADVERTISEMENT


அலிகார், உத்தர பிரதேசத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக போலீஸ் ஸ்டேஷன் சென்ற பெண், அங்கு எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உத்தர பிரதேசத்தின் அலிகாரை சேர்ந்தவர் இஷ்ரத், 55. இவர், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரை செல்ல, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார்.

அது தொடர்பான விசாரணைக்காக அலிகாரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று சென்ற அவர், அதற்காக காத்திருந்தார்.

அவரிடம் விசாரணை நடத்த தயாராக இருந்த சப் - இன்ஸ்பெக்டர் ஒருவர், மற்றொரு போலீஸ்காரர் ஒருவர் கொடுத்த கைத்துப்பாக்கியை பரிசோதித்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அதிலிருந்து சீறிப்பாய்ந்த குண்டு, எதிரே நின்றிருந்த இஷ்ரத்தின் தலையில் பாய்ந்தது.

இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இஷ்ரத்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான சப் - இன்ஸ்பெக்டர் தப்பி ஓடியதை அடுத்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக இஷ்ரத்திடம் சம்பந்தப்பட்ட அதிகாரி பணம் கேட்டதாகவும், அதை தராததால் துப்பாக்கியால் சுட்டதாகவும் அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அலிகார் எஸ்.எஸ்.பி., கலாநிதி நைதானி கூறுகையில், ''அலட்சியமாக செயல்பட்டதாக சப் - இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

''போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


வாசகர் கருத்து (4)

  • venugopal s -

    நிகழ்வு நடந்ததோ உத்தரப்பிரதேச மாநிலம், பாதிக்கப்பட்டவரோ சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்! அப்புறம் என்ன? விபத்து தான்!

    • பேசும் தமிழன் -

      பாதிக்கப்பட்டவர் பாலைவன மார்க்க ஆள்.... சம்பவம் நடந்த இடம் உ.பி.... அப்போ தமிழகத்தில் செய்தி வந்தால் விபத்து கூட.... கொலை முயற்சி என்று தான் செய்தி வரும் !!!

    • Ashok Kumar - Madurai

      பாலைவன மார்க்க ஆள்.... மனிதர் இல்லையா?? சப் - இன்ஸ்பெக்டர் கையில் இருந்த கைத்துப்பாக்கி சுட்டால் அவர்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.... சப் - இன்ஸ்பெக்டர்க்கு தெரிந்து சுட்டுஇருந்தால் சிறுபான்மைக்கு ஆபத்து தெரியாமல் கைத்துப்பாக்கி சுட்டுஇருந்தால் அது எல்லோருக்கும் ஆபத்து...

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    எனக்கு என்னமோ இது லஞ்சம் தராததால் சுட்டிருப்பார் என்றுதான் தோன்றுகிறது. இது ஒரு கொலை. சுட்டவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement