Load Image
Advertisement

மிக்ஜாம் புயல் பாதிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு ஸ்டாலின் கடிதம்

Migjam cyclone impact: Stalins letter to Union minister Nirmala  மிக்ஜாம் புயல் பாதிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு ஸ்டாலின் கடிதம்
ADVERTISEMENT
சென்னை: புயல்பாதித்த தொழில் நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்தும் கால அவகாசத்தை நீட்டிக்க கோரி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின், கடிதம் எழுதியுள்ளார்.


இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சருக்கு எழுதிய கடித விவரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள24 தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 4,800சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிக்ஜாம் புயல், மற்றும் கனமழையால் மூலதன பொருட்கள் மறறும் உற்பத்தியான பொருட்கள் சேதம் அடைந்து தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்படாத நிலையில் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

மாநில அரசு மின்விநியோகம் மற்றும் சாலை போக்குவரத்தை உடனடியாக சீர் செய்த போதிலும் மேற்கண்ட நிறுவனங்கள் உற்பத்தியை துவக்க சிறிது காலம் தேவைப்படும். இதனால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மூலதன கடன் திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றி அமைத்திடவும், கூடுதல் மிகை பற்று (ஒவர் டிராப்ட்) வசதியினை வழங்கிடவும், கூடுதல் நடைமுறை மூலதன கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அறிவுறுத்தவும் காப்பீட்டு தொகையை கால தாமதமின்றி மதிப்பீடு செய்து உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குறு மற்றும் சிறு ,நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ உறுதுணையாக அமையும் என கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.


வாசகர் கருத்து (7)

 • அப்புசாமி -

  தத்திங்க... ஓசி பஸ் சவாரி, நகைக்கடன் தள்ளுபடின்னு உருப்படாத திட்டங்கள். இன்னிக்கி வேற மூஞ்சியை வெச்சுக்கிட்டு...

 • அப்புசாமி -

  விதி 110 கீழே நல்க காரியத்துக்கு, தொழிற்சாலைகளுக்கு கடன் குடுக்க முடியாதா கோவாலு? கள்ளச்சாராய சாவுக்கு மட்டும்தான் குடுப்பாங்களா?

 • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

  யாரை கிண்டல் செய்தார்களோ அவர்களிடமே கையேந்த வேண்டிய நிலையை பார்த்தாவது இனி வரும் களங்களில் கண்ணியமாக நடந்து கொள்வார்களா என எதிர் பார்க்க முடியாது. நாய் வாலை நிமிர்த்த முடியாது.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  ஒருவேளை G-Square காரனுக்கு வங்கியில் அதிக கடன் இருக்குமோ..??

 • Sivagiri - chennai,இந்தியா

  அட - டில்லிக்காரர்கள் செய்யப் போறதை - தனது டில்லி ஏஜென்டுகள் மூலம் முன்கூட்டியே தெரிஞ்சிக்கிட்டு - டயம் பாத்து கோரிக்கை கடுதாசி போட்ருவாரு - ஏதோ இவரு மூளையில் உதித்த மாபெரும் சிந்தனை போல - கருணாநிதி - வைகோ - மாறன் - பாலு - காலத்திலிருந்து நடக்கும் வித்தை இது - - -

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்