Load Image
Advertisement

புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்

ChennaiFloods2023: Chief Minister Stalin: Relief of Rs.6,000 to those whose livelihoods were affected by the storm   புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்
ADVERTISEMENT
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 6ஆயிரம் வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும். புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தினை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மானவாரி பயிர்கள் 33 சதவீதம் அல்லது அதற்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தால் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8500 வழங்கப்படும். 33 சதவீதத்திற்கு மேல் சேதமான பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்.
சேதமடைந்த மரங்கள், நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500 வழங்கப்படும்.

புயலினால் உயிரிழந்த எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணம் ரூ.3ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த மீன்பிடி வலைகள் உட்பட கட்டுமரங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

பகுதியாக சேதமடைந்த கட்டு மரங்களுக்கு நிவாரண நிதி ரூ.10,000லிருந்து ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். முழுவதும் சேதமடைந்த வல்லம் படகுகளுக்கு மானியத்தொகையாக ரூ.1லட்சம் வழங்கப்படும். முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு ரூ.7.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். சேதமடைந்த வலைகளுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (19)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இந்த அரசு அதிக நிவாரணம் கொடுக்கும்.

  • r ravichandran - chennai,இந்தியா

    மத்திய அரசு கொடுத்த 950 கோடி ரூபாயில் வெறும் 6000 மட்டும் தான் கொடுக்க படுகிறது, இது மிகவும் குறைவு, மாநில அரசு தனது பங்கிற்கு 4000 ரூபாய் சேர்த்து கொடுக்க வேண்டும், ஓரளவிற்கு மக்களுக்கு பயன் படும்.

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    வெள்ள நிவாரப்பணிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்த கவுன்சிலர்கள், MLA க்கள் இவர்களுக்கு எதுவும் அபராதம் உண்டா?

  • g.s,rajan - chennai ,இந்தியா

    தமிழக மக்களுக்கு லட்சக்கணக்கில் ,புயல் வெள்ளத்தால் கோடிக்கணக்கில் நஷ்டம் ,இது என்ன பிச்சை போடுவது போல இருக்கு ....

  • krishna - trichy,இந்தியா

    மத்திய அரசு கொடுத்த நிதயை வைத்து ஸ்டாலின் இந்த் நிவாரண நிதியை அறிவிக்கிறார். இதை dmk முத்திரை குத்தி ஆதாயம் தேட முயல்வார். இது இவர்களுடைய சீப் அரசியல். அனால் தமிழாடுதான்தன்னுடைய பொருளாதார வளர்ச்சினால் மத்திய அரசுக்கு கோடி கணக்கான சம்பாதித்து தந்து இருக்கிறது என்ற மார் தட்ட கூடும். அதுவம் மட்டும் இல்லமால் தன்னுடைய சாமர்த்யத்தினால் இந்த தொகையை வாங்கி வர முடிந்தது என்றும் பீத்தி கொள்வார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்