Load Image
Advertisement

எண்ணெய் கழிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

 Oil waste issue: Green Tribunal orders action   எண்ணெய் கழிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
ADVERTISEMENT
சென்னை: வெள்ளநீரில் எண்ணெய் கசிவு கலந்து வந்தது குறித்து தமிழக அரசு 12ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும் படி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருவொற்றியூரில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய ஆயில் கழிவுகள், மழை நீருடன் கலந்து 30,000த்துக்கும் மேற்பட்ட வீடுகளில் படர்ந்து, அங்கு வசிப்போருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் என, பல கோடிக்கு மேல் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே எண்ணெய் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக வந்து இந்த வழக்கை எடுத்தது. இதில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் தரை பகுதியில் உள்ள எண்ணெய் மழை நீரில் கலக்கும் என்பது உங்களுக்கு முக்கூட்டியே தெரியாதா? என்றும் மாவட்ட கலெக்டரும் வருவாய் நிர்வாகத்தினரும் என்ன செய்கின்றனர்? என்று கேள்வி எழுப்பியது.

மேலும் இதன் உண்மை நிலையை அறிய அரசு ஏன் நிபுணர் குழுவை அமைக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியது. எண்ணெய் கழிவு கலக்கப்பட்டதாக ஆதாரம் இல்லை என மாசுக்கட்டுப்பாடு வாரியம் விளக்கம் அளித்தது. வெள்ளநீரில் எண்ணெய் கசிவு கலந்து வந்தது குறித்து தமிழக அரசு 12ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (4)

  • krishna - trichy,இந்தியா

    in Petrol bunks the oil can mix with water and runs to the drainage. This is very common. The oil waste from the Industries should be properly disposed and there are guidelines how the waste should not affect the environment albeit natural calamities. These problems and solution are well documented as the State have seen many natural calamities.

  • Indhiyan - Chennai,இந்தியா

    அதிகாரிகள் என்ன செய்தார்களா? இந்தியாவில் காசு கொடுத்தால் அதிகாரிகள் வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள். ஏரிகள் எப்படி ஆக்கிரமிக்கப்பட்டன? அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுத்தார்கள்?. இந்தியா பெருமை மிக்க நாடு என்பதை விட எங்கு பாத்தாலும் ஊழல் மிக்க நாடு என்பது தான் உண்மை.

  • அப்புசாமி -

    இத்தனை நாளும் தூங்குவாங்க. எங்காவது டேமேஜ் வந்திச்சுன்னா வரிஞ்சு கட்டிக்கிட்டு தாமாகவே விசாரிப்பாங்க. கூவம் வருஷக்கணக்கிலே நாறுது. ப.தீ.ஆ ஏதாவது செஞ்சுதா?

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    அடப்பாவிகளா ஆதாரம் இல்லையாம்....அப்புறம் மழை நீரை கருப்பாக பெய்ததா? விடியல் ஆட்சியில் ஊழல் கட்சி உறுப்பினர்கள் முதல் முதல் அமைச்சர் வரை தொடர்ந்து பேசிவரும் பொய்யை விட இந்த அதிகாரிகள் பேசும் பொய் உலக சாதனையை ஏற்படுத்திவிட்டது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்