Load Image
Advertisement

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசுக்கு என்ன பயம்?: கேட்கிறார் அன்புமணி

 What is the DMK government afraid of?: Anbumani asks  ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசுக்கு என்ன பயம்?: கேட்கிறார் அன்புமணி
ADVERTISEMENT
சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசுக்கு என்ன பயம்? என பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரையில் பா.ம.க நடத்திய சமூக நீதிக்காக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கில் கட்சியின் தலைவர் அன்புமணி பேசியதாவது: தமிழகத்தில் 1931ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசுக்கு என்ன பயம்?. உண்மையாக பின்தங்கி உள்ள மக்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு சலுகைகள், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதான் உண்மையான சமூக நீதி.

அதிகாரம் இருந்தும் எடுக்க மாட்டோம் என்று கை கழுவி விடுவது சமூக நீதிக்கு எதிரான சமூக அநீதி. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் சமூக நீதிப் பற்றி திமுக பேச வேண்டாம். இந்தியா முழுவதும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. திமுக அரசு தட்டிகழிப்பதற்கு என்ன காரணம்.

இனியும் வெள்ளத்தடுப்பு பணிகளை தமிழக அரசு தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். போதைப்பழக்கமும், சினிமா மோகமும் பெருகி விட்டன. சென்னையில் 99 சதவீத மழைநீர் அகற்றப்பட்டு விட்டதாக தலைமைச் செயலாளர் சொல்கிறார். ஆனால் இது பொய். பலர் இறந்ததாக செய்தித்தாள்களில் வருகிறது. ஆனால் அரசு எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. புயலால் அடுத்து தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


வேகம் போதவில்லை
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வருவதில் தமிழக அரசின் வேகம் போதவில்லை. நீர்நிலைகளை 96 சதவீதம் அரசும், தொழிலதிபர்களும் தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்றார்.வாசகர் கருத்து (10)

 • BalaG -

  படித்த முட்டாள் மாதிரி பேசிகிட்டு. எப்போ பார்த்தாலும் சாதி சாதி னு கத்திக்கிட்டு. கொஞ்சம் கூட மாத்தி யோசிக்க தெரியாதா? அசிங்கமா இருக்குய்யா உங்களை எல்லாம் நினைச்சாலே.. உங்க ஆளுங்க படிச்சி முன்னேறி 30 வருஷம் தாண்டிப்போச்சு, இன்னும் அவங்க அப்பன் மாதிரியே சாதி சாதி னு கத்திக்கிட்டு. வேற பொழப்பு மயி... கிடையாதா?

 • vadivelu - thenkaasi,இந்தியா

  சாதியை ஒழிக்க சாதி வரி கணக்கா? ஊரை ஏமாற்றும் செயல்.பெரியரை போற்றும் அன்புமணிக்கு இது தேவையா.

 • பைரவர் சம்பத் குமார் -

  1). தன் இனமக்கள் அதிகமாக தமிழகத்தில் உள்ளனர் என்ற ஒரு இறுமாப்பை அவர்கள் இனமக்கள் இடையே உருவாக்கத்தான் இந்த ஜாதி கணக்கெடுப்பு குறித்து அன்புமணியின் எண்ணம்.2). அதன் மூலம் தற்போது அமைதியாக உள்ள பாட்டாளி மக்களை உணர்ச்சி பூர்வமாக திரும்பவும் அவர் அப்பா அதாவது ராமதாஸ் காலத்துக்கு கொண்டு செல்ல அன்புமணி எண்ணுகிறார்.3). அந்த உணர்ச்சி பூர்வமாக வன்னியர்களை உருவாகி அதன்மூலம் அறுவடை செய்து அவர்களை திரும்ப ஒன்றுதிரட்டி தமிழகத்தை ஜாதி கட்சிகளின் கட்டுபாட்டில் கொண்டுவர பார்க்கிறார்.

 • K.Ramakrishnan - chennai,இந்தியா

  எப்ப பாரு... சாதி ... சாதி... தானா... வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிப்பது பற்றி பேசாமல் சதா சாதி பற்றிய பேச்சு தானா... அதுவும் உங்க சாதியைப் பற்றி மட்டுமே பேசுறீங்க.. பிறகு எப்படி மற்ற இனத்து மக்கள் ஓட்டு போடுவாங்க...?

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  பின் தங்கிய சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை அய்யா இவரது தோப்பனார் பயன்படுத்தி வைத்தியம் படித்து வேலைபார்த்து பிறகு அது தெரியவந்தவுடன் அரசங்கபதிவியிலிருந்து தள்ளப்பட்டவர் நீக்கப்பட்டவர் இது மட்டும் நினைவில் இருக்கட்டும் மக்களே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement