Load Image
Advertisement

"அரசின் நிவாரண உதவிகள் மக்களை சென்று சேரவில்லை": அண்ணாமலை குற்றச்சாட்டு

Chennai Karapakkam, Chennai Floods: Government relief aid not reaching people: Annamalai allegation   "அரசின் நிவாரண உதவிகள் மக்களை சென்று சேரவில்லை": அண்ணாமலை குற்றச்சாட்டு
ADVERTISEMENT
சென்னை: ''அரசின் நிவாரண உதவிகள் பெரும்பாலான மக்களுக்கு சென்று சேரவில்லை'' என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை காரப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை பொருட்களை தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசின் நிவாரண உதவிகள் பெரும்பாலான மக்களுக்கு சென்று சேரவில்லை. மக்கள் சாலைக்கு வந்து மக்கள் பிரதிநிதிகளை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் பாதிப்பு குறித்து அரசு அதிகாரிகள் மக்களிடம் உண்மையை மட்டும் சொல்ல வேண்டும். அதிகம் பாதிக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.


நோட்டீஸ்




ஆவின் பால் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இடையே கடந்த சில நாட்களாக கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் சமூக வலைதளங்களில் மாறி மாறி கருத்து பதிவிட்டு வந்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் தன்னைப் பற்றி விமர்சித்ததாக கூறி அவருக்கு எதிராக அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நோட்டீசில்,''அமைச்சர் மனோ தங்கராஜ் மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாயை ஆவின் வைப்பு நிதிக்கு வழங்க வேண்டும். 15 நாட்களில் மன்னிப்பு கோரவும், மான நஷ்ட ஈடு வழங்கவும் தவறும் பட்சத்தில், சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (7)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    மொதல்ல மத்திய அரசில் இருந்து நிவாரண நிதியை தமிழகத்திற்கு அள்ளிக் கொடுங்க,கிள்ளிக் கொடுக்காதீங்க,அதை ஆளுங்கட்சியினர் சுயநலத்தோடு சுருட்டினா மக்கள் நிச்சயம் பொங்கி எழுவார்கள்.கொடுக்காமல் ஏமாற்றினால் கட்டாயம் வன்முறையில் ஈடுபடுவார்கள் .

  • g.s,rajan - chennai ,இந்தியா

    நிவாரணமெல்லாம் போக வேண்டிய இடத்திற்கு கண்டிப்பாகப் போயிருக்கும், ஆமா தெரியாமத்தான் கேட்கிறோம் இந்த நிவாரணம் யாருக்காக ...???

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    பிரதமர் பற்றி தரக்குறைவாக விமர்சிக்கும் அனைத்து கோஷ்டிகள் மீதும் பிரதமர் சார்பில் வழக்குத்தொடர வேண்டும். 98% வேலையை முடித்துவிட்டதாக பொய் சொல்லி உருட்டியதற்கெல்லாம் பொதுமக்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும்.

  • abdulrahim - dammam ,சவுதி அரேபியா

    அரசியல் காழ்ப்புணர்ச்சி

  • duruvasar - indraprastham,இந்தியா

    நாவடக்கமின்மை என்பது திமுகவில் தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று. குறைந்தபட்சம் அமைச்சர்களாக இருப்பவர்களாது தாங்கள் வகிக்கும் பதவியை மனதில்கொண்டு கொஞ்சமாவது திருத்திக்கொள்ள முயற்ச்சிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த கதிதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்