Load Image
Advertisement

சரிப்பட்டு வராத அதிகாரியை பந்தாடிய தி.மு.க.,வினர்!

 The DMK who attacked the officer who has not been corrected!    சரிப்பட்டு வராத அதிகாரியை பந்தாடிய தி.மு.க.,வினர்!
ADVERTISEMENT

''சரிப்பட்டு வராத அதிகாரியை துாக்கி கடாசிட்டாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''பெரம்பலுார் மாவட்டத்துல, 31 கல் குவாரிகளுக்கு நடக்க இருந்த டெண்டர், அக்., 30ம் தேதி ஆளுங்கட்சியினர் ரகளையால ரத்தாயிட்டுல்லா... டெண்டரை மீண்டும் நடத்தி, தாங்களே எடுக்க ஆளுங்கட்சியினர் திட்டமிட்டாவ வே...

''அதுக்கு, தங்களுக்கு தோதான அதிகாரி வேணும்கிறதால, சேலம், திருச்சி உட்பட 14 மாவட்டங்களுக்கு உயர் அதிகாரியான இணை இயக்குனர் சரவணனை, பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனரா கூடுதல் பொறுப்புல நியமிக்க வச்சாவ...

''அவரும், 31 குவாரிகளுக்கும் டெண்டர் விட நடவடிக்கை எடுத்தாரு வே... அவரிடம், ஆளுங்கட்சி முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், இதுவரைக்கும் டெண்டர் விடாம இருக்கிற மற்ற குவாரிகளுக்கும் சேர்த்து டெண்டர் விடணும்னு நெருக்கடி குடுத்தாவ...
Latest Tamil News
''சரவணனோ, 'விதிமுறைகளின்படி அனைத்து குவாரிகளுக்கும் டெண்டர் விட, குறைஞ்சது ஆறு மாசமாவது ஆகும்'னு கைவிரிச்சிட்டாரு வே...

''இதனால, கடுப்பான ஆளுங்கட்சியினர், ராணிப்பேட்டையில உதவி இயக்குனரா இருந்த பெர்னாட் என்பவரை, பெரம்பலுார் மாவட்டத்துக்கு மாத்திட்டு, சரவணனை மதுரை மண்டலத்துக்கு துாக்கி அடிச்சிட்டாவ...

''அனைத்து கல் குவாரிகளுக்கும் டெண்டர் விடணும்கிற நிபந்தனையோட தான், பெர்னாட்டை இங்க கொண்டு வந்திருக்கிறதா, கனிமவளத் துறை வட்டாரங்கள்ல பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.


வாசகர் கருத்து (7)

  • MUTHUMANI S - TRICHY,இந்தியா

    "ஆட்சியே எங்கள் கையில் " ஆடுபவர்க பஞ்சம்

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    விடியல் சார் இன்னோமோரு சீடரை உயர் பதவியில் அமர செய்வது பொருக்காது சங்கிகள் விஷமம் என துரை கூவுவார்

  • தத்வமசி - சென்னை ,இந்தியா

    இதெல்லாம் ஒரு ஆட்சியா ?

  • HoneyBee - Chittoir,இந்தியா

    பாவாடை கட்டாயம் செய்துவிடும்... அடிமைகள் தானே

  • Ramesh - Chennai,இந்தியா

    ஆனா நாங்க இங்க இருந்து நீங்க சொன்னதை சொன்னோம்னு வைச்சுக்க அப்புறம் நாங்க தான் பிச்சை எடுக்கணும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement