Load Image
Advertisement

18 மாவட்டங்களில் இன்று கனமழை

 Heavy rain in 18 districts today     18 மாவட்டங்களில்  இன்று கனமழை
ADVERTISEMENT

சென்னை : தமிழகம், புதுச்சேரியில், 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:



தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்கிறது. மாநிலம் முழுதும், 80க்கும் மேற்பட்ட இடங்களில், மிதமான அளவுக்கு மழை பெய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பெரும்பாலான மாவட்டங்களில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்காலிலும், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனியார் வானிலை கணிப்பு



'ஜூம்.எர்த்' இணையதளம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இன்று பிற்பகல் வரை, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். 'பிற்பகலுக்கு பின், மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்' என, கூறப்பட்டு உள்ளது.

'விண்டி' இணையதளத்தில், 'இன்று பிற்பகலில் இருந்து, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில், கனமழை பெய்யும்.

'சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்' என, கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்