Load Image
Advertisement

வடியாத வெள்ள நீரால் 5வது நாளாக தொடரும் அவதி

Suffering continues for 5th day due to incessant flood water  வடியாத வெள்ள நீரால் 5வது நாளாக தொடரும் அவதி
ADVERTISEMENT

வேளச்சேரி, விஜய நகர், ராம் நகர், டான்சி நகரின் பல பகுதிகளில், மழை ஓய்ந்து ஐந்து நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாமல் உள்ளது. வீடுகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில், மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடுகளில் இருந்த எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல் பொருட்கள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், நனைந்து வீணாகியுள்ளன.

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' சார்பில் வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், பெருங்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் பாட்டில், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
Latest Tamil News
ஆதம்பாக்கம் 'நலம் செய விரும்பு' எனும் தன்னார்வ அமைப்பு, கடந்த மூன்று நாட்களாக வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், தாம்பரம், பீர்க்கன்கரணை, பெருங்களத்துார் உள்ளிட்ட பகுதிகளில், நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

வேளச்சேரி சூர்யா அறக்கட்டளை சார்பில் அம்பேத்கர் நகர், சக்தி நகர், ஜெகநாதபுரம், திரவுபதி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில், தினமும் 100 கிலோ கலவை சாதம் வழங்கப்படுகிறது.

ஏராளமான ஐ.டி., நிறுவன இளைஞர்களும், இளம்பெண்களும், விளம்பரமின்றி சேவையாற்றி வருகின்றனர். மடிப்பாக்கம் சமுதாய சேவை அமைப்பினர், மடிப்பாக்கம் பகுதியில் விழுந்த மரங்களை அகற்றினர்.Latest Tamil News

புறக்கணிப்பு'மிக்ஜாம்' புயல் காரணமாக, தாம்பரம் மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இதில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ள 47, 65, 66, 69, 70 ஆகிய ஐந்து வார்டுகள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்த வார்டுகளில் உள்ள பதுவஞ்சேரி, ஜோதி நகர், நுாத்தஞ்சேரி, அண்ணா தெரு, காந்தி நகர், ராஜாஜி நகர், ரிக்கி கார்டன், விக்னேஷ் அவென்யூ, கர்ணன் தெரு, ஜகஜீவன் ராம் நகர் குளக்கரை பகுதி, அம்பேத்கர் நகர், இந்திரா நகர் கிழக்கு, எம்.ஜி.ஆர்., நகர், ஹவுசிங் போர்டு, ஆல்பர்ட் பொன்னுசாமி தெரு ஆகிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

ஆனாலும், மீட்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க, மாநகராட்சி நிர்வாகம் எட்டிக்கூட பார்க்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மயிலாப்பூரில் கழிவுநீர்மயிலாப்பூர் அப்பாசாமி தெரு, சிதம்பர சுவாமி கோவில் மூன்று தெருக்கள், வீரபெருமாள் தெரு ஆகியவற்றில் மழைநீர் தேங்கியுள்ளது. தற்போது இதில் கழிவுநீர் அதிகமாக கசிந்து துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர், பால் கிடைக்காத நிலையில், அங்குள்ள மக்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.

இப்பகுதியில் குவிந்துள்ள குப்பை அகற்றப்படவில்லை. குப்பையால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் ஆபத்தும் உள்ளது.
இதேபோல, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, திரு.வி.க., நகரில் மழைநீரில் கழிவுநீர் கலந்து தேங்குகிறது. சூளைமேடு பகுதியில், இதுபோல் தேங்கிய கழிவுநீரை, பொதுமக்களே அகற்றினர்.

அண்ணா நகர் மண்டலத்தில், அண்ணா நகர் 'எப்' பிளாக், சிந்தாமணி, வில்லிவாக்கம், அரும்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட இடங்களில், புயல் காரணமாக விழுந்த மரக்கழிவுகள், சாலையை ஆக்கிரமித்து உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, அவற்றை உடனே அகற்ற வேண்டும்.

கோவிலில் கழிவுநீர்சூளை, பட்டாளம் மார்க்கெட் பகுதியில் தேங்கிய மழைநீரை முற்றிலும் அகற்ற முடியாத நிலையில், தற்போது மழைநீரில் சாக்கடை நீரும் கலந்து, அப்பகுதி நாசமாகியுள்ளது.

அங்காளம்மன் கோவில் தெரு உட்பட, சுற்றுவட்டார சாலைகளில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி வருகிறது.
இதனால், அப்பகுதியில் நடக்கக்கூட முடியாத அளவிற்கு சகதி நிரம்பியுள்ளது. மேலும், அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் கழிவுநீர் தேங்கியுள்ளது.

அம்பத்துாரில் குமுறல்வடசென்னையில் பல பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தேங்கிய மழைநீர் கழிவுநீர் கலந்து சேறும், சகதியுமாக மாறியது.

அதேபோல், பகுதி மக்கள் வீணான பொருட்களை தெருவில் வீசியுள்ளதால், தண்டையார்பேட்டை மண்டலத்தில் அனைத்து பகுதிகளிலும், குப்பை மலை போல் குவிந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பை அகற்றும் பணியில், தற்போது 250 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அம்பத்துார் மண்டலத்தில், கொரட்டூர், அம்பத்துார் தொழிற்பேட்டை உள்ளிட்ட, தாழ்வான பகுதிகளில், இன்னும் மழைநீர் முழுமையாக வடியவில்லை. மின் வினியோகமும் சீராகவில்லை.

இந்த நிலையில், கழிவுநீர் பிரச்னையும் பூதாகரமாகி உள்ளது. அம்பத்துார் விஜயலட்சுமிபுரம், அழகிரிசாமி தெரு, மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெரு, கொரட்டூர் என, மண்டலத்தின் பல பகுதிகளில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, எண்ணெய் படலம் கலந்த கழிவுநீர் வெளியேறி, சாலையில் பாய்கிறது.

திருவொற்றியூர், ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. மின் மோட்டார் வாயிலாக வெளியேற்றுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
போக்குவரத்து பாதிப்பு

மின் வினியோகத்தை சீரமைக்க வலியுறுத்தி, பேசின்பிரிட்ஜ் மின்வாரிய அலுவலகம் அருகே, நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, புளியந்தோப்பு மக்கள் போராட்டத்தை துவக்கினர்.

இதனால், 1 கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுந்தரபுரம், கே.பி., பார்க் மைதானத்தில் இருந்து வெளியே வந்த 50க்கும் மேற்பட்ட கஞ்சா போதை ஆசாமிகள், அங்கு ரகளையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை சாலை மறியல் ஒருபுறம், கஞ்சா கும்பல் அட்டகாசம் மறுபுறம் என பலரும் வீட்டிற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
கால்வாயில் பெண் சடலம்

புளியந்தோப்பு, நரசிம்ம நகர், பின்னி கால்வாய் தெற்கு கரையோரம், 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் ஒன்று குப்புற கவிழ்ந்த நிலையில் மழைநீரில் அடித்து வரப்பட்டிருந்தது. சடலத்தை வியாசர்பாடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இறந்த பெண் குறித்து, பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.வாசகர் கருத்து (12)

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  என்னதான் மழை வெள்ளம் வந்தாலும் இந்த பகுதிகளில் ராம் நகர் , வேளச்சேரி பகுதிகளில் நிலம், flats விலை குறைந்த பாடில்லை.

 • Saisenthil - Salem,இந்தியா

  திராவிடர்கள் எப்போதும் தமிழர்களை கண்டு கொள்ள மாட்டார்கள் இது ஆங்கிலேய மற்றும் அமெரிக்க நாய்களின் சதி சுமார் 1500 வருடங்களாக பல விஷயங்கள் இங்கே மறைக்கபடுகிறது, தமிழர்களை அழிக்க பார்க்கிறார்கள்

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  சென்னை மாநகராட்சி நிர்வாகம் செயல் இழந்து நிற்கிறது ....

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  விடியல் வந்த நேரம்

 • duruvasar - indraprastham,இந்தியா

  இவ்வளவு போய்க்கொண்டிருக்கும்ப்போதும் எம் எல் எ, அமைச்சர்களின் பேச்சுக்கள் குறிப்பாக மாசு, சேகர் பாபு இருவரும் விடும் அறிக்கைகள் எரிய நெருப்பில் எண்னையை விடுவது போல் இருக்கிறது. கட்டாயம் இதற்க்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்