Load Image
Advertisement

3 மாதமாக சபாநாயகர் மவுனம் காத்தது ஏன்?

 Why did the Speaker keep silent for 3 months?    3 மாதமாக சபாநாயகர் மவுனம் காத்தது ஏன்?
ADVERTISEMENT

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்ட சபையின் சபாநாயகர் அப்பாவு, 'அமலாக்கத் துறை பெயரில், என்னையும் சில இடைத் தரகர்கள் மிரட்டினர்' என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

'மூன்று மாதங்களுக்கு முன், என்னிடமும் இடைத்தரகர்கள் பேசினர். நான் அதை காது கொடுத்து கேட்கவில்லை. தொடர்ந்து மூன்று முறை பேசியதால், 'தம்பி இனி என்னிடம் அந்த வேலை வேண்டாம்' என, அவர்களுக்கு பதில் கூறினேன்.

'மத்திய அரசு, உங்களுக்கு எதிராக பிரச்னை செய்யும்படி கூறியுள்ளது. முடிந்தால், ஊரை விட்டு சில காலம் வெளியே சென்று விடுங்கள்; உங்கள் மொபைல் எண்ணை மாற்றி விடுங்கள் என்றெல்லாம் மிரட்டினர்' என்றும் கூறியுள்ளார்.

முதலில், 'இடைத்தரகர்கள் பேச்சை நான் காது கொடுத்து கேட்கவில்லை' என்கிறார். பின், 'மத்திய அரசு பிரச்னை செய்யும்படி கூறியது, என மிரட்டினர்' என்கிறார். இதில், எது உண்மை?

சபாநாயகர் பதவி வளம் கொழிக்கும் பதவி அல்ல. அதற்கு மதிப்பும், மரியாதை யும், கவுரவமும் மட்டுமே கிடைக்கும். அவர் சபைக்குள் நுழைந்தால், முதல்வரே எழுந்து நிற்க வேண்டும். இந்த மரியாதையை தவிர, பெரிதாக வேறு எதுவும் தேறாது. அப்படியான பதவியில் இருக்கும் அப்பாவுவை, அமலாக்கத் துறை பெயரில் யார் மிரட்டியிருப்பர்.

சரி, அப்படியே மிரட்டினாலும், அடுத்த நிமிடமே பத்திரிகையாளர்களை அழைத்து பகிரங்கப்படுத்தி இருக்கலாம்; காவல் துறையில் புகார் அளித்து இருக்கலாம். அப்படி செய்திருந்தால், அந்த மொபைல் போன் அழைப்பை வைத்து, சைபர் கிரைம் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்து இருப்பரே.

எதையும் செய்யாமல், மூன்று மாதங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்து விட்டு, மதுரையில் ஒரு நாடகம் அரங்கேறியதும், 'என்னையும் மிரட்டினர்' எனக் கூறுவதில், சிறிதும் நம்பகத்தன்மை இல்லை.

தனக்கு பதவி தந்த கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நடக்காத ஒன்றை நடந்ததாக கூறுவது சரியல்ல.


வாசகர் கருத்து (24)

  • S.Bala - tamilnadu,இந்தியா

    வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    இவரை மிரட்டியது யார் ? இவர் கனவு கண்டுள்ளார்

  • HARIPRASATH G - chidambaram,இந்தியா

    மதுரையில் நாடகம் நடைபெறவில்லை. அமலாக்க துறையில் ஒரு கருப்பாடு பிடிபட்டது. அது நடந்தவுடன் சேர்த்து தனக்கு மிரட்டல் வந்ததாக இப்போது சொல்கிறார் சபாநாயகர் திரு.அப்பாவு. அன்றய தினமே சொல்லி இருக்கலாம்.

  • Sampath Kumar - chennai,இந்தியா

    சொல்வதும் சொல்லாததும் அவரு இஷ்டம் அதை கேக்க நீ யாரு ?/ உங்க அமலாபால் துறை அசிக்கப்பட்டு நிக்குதே அது உன் கானுக்கு தெரிய வில்லை ராஜஸ்தான் தொடக்கம் தமிழ் நாடு வரை பல் இழக்கின்றது இந்த துறை அதை பற்றி பேச உன்னால் முடியுமா ?

  • duruvasar - indraprastham,இந்தியா

    . ஐயா அவர்கள் இதுவரை காவல்துறையில் புகார் கொடுத்ததாக தெரியவில்லை அதன் காரணம் ஐயாவுக்குத்தான் தெரியும். ஒருவேளை தமிழக காவல்துறையின் மேல் நம்பிக்கையில்லையோ அப்படியாயின் சி பி ஐ இடம் ஒப்படைக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்