Load Image
Advertisement

400 டன் பொருட்கள் ரேஷன் கடைகளில் வீண்

 400 tonnes of goods wasted in ration shops    400 டன் பொருட்கள் ரேஷன் கடைகளில் வீண்
ADVERTISEMENT

சென்னை : 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் கனமழை பெய்தது.

இதனால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு தேங்கிய தண்ணீர், வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களுக்குள் புகுந்தது. அத்துடன் மேற்கண்ட மாவட்டங்களில் இருந்த 226 ரேஷன் கடைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

அவற்றில் இருந்த 333 டன் அரிசி; 19 டன் கோதுமை; 38 டன் சர்க்கரை; 4000 லிட்டர் பாக்கெட் பாமாயில் ஆகியவை வீணாகியுள்ளன. அவை கடைகளில் இருந்து கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளை காப்பீடு செய்துள்ளன. எனவே ஒவ்வொரு கடைக்கும் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்யும் பணி நடக்கிறது.

அதன் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனங்களிடம் இழப்பீடு கேட்டு, சேதமடைந்த கடைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


வாசகர் கருத்து (7)

  • sankar - Nellai,இந்தியா

    கணக்கு தருவதில் கில்லாடிகள் - ஏற்கெனவே சீனியை எறும்பு தின்ற கணக்கு, சீனி மூட்டைகளை கரையான் தின்ற கணக்கு இவை எல்லாம் விஞ்ஞான பூர்வமானவை என்று சர்க்காரியா கமிஷன் சொல்லவில்லையா

  • lana -

    சென்னையில் தண்ணீரே தேங்க வில்லை ன்னு bannu டிவி முதல் rsb media கதை விட்டார்கள். ஆனால் இது என்ன

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    திராவிட செயற்கைப்பேரிடர் என்பதால் நஷ்ட ஈடு கிடைப்பது சந்தேகமே...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    திராவிட செயற்கைப்பேரிடர் என்பதால் நஷ்ட ஈடு கிடைப்பது சந்தேகமே...

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவ்வளவு தானியங்கள், உணவுப்பொருள்களை உற்பத்தி செய்ய உழவர்கள் எவ்வளவு காலம் கடின உழைப்பைக் காட்டியிருப்பார்கள்? அவற்றை பாதுகாக்கக்கூட வழிவகை செய்யாது, பேனா ஊர்வலம், கார் ரேஸ் என்று ஊதாரித்தனம் செய்கிறது அரசு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement