Load Image
Advertisement

போலீஸ்காரரின் தாயுள்ளம் கமிஷனர் அழைத்து பாராட்டு

 The policemans mother was called and praised by the commissioner    போலீஸ்காரரின் தாயுள்ளம் கமிஷனர் அழைத்து பாராட்டு
ADVERTISEMENT


சென்னை,சென்னை, துரைப்பாக்கம் காவல் நிலைய சுற்றுக் காவல் ரோந்து வாகன பொறுப்பாளர் தயாளன்; தலைமை காவலர்.

இவர், கடந்த 5ம் தேதி, மழை நீர் சூழ்ந்த துரைப்பாக்கம், ஓ.எம்.ஆர்., சாலை, வி.ஜி.பி., அவென்யூவில் உள்ள 13 தெருக்களில் மீட்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது, மழை நீரில் சிக்கிய தம்பதி, குழந்தையுடன் அத்தியாவசியப் பொருட்கள் இருந்த பையை துாக்க முடியாமல் தவித்த படி வந்து கொண்டிருந்தனர். அவர்களின் உடமைகளை வாங்கி துாக்கி சுமந்த தயாளன், குழந்தையையும் வாங்கி, தாயுள்ளத்துடன் கொஞ்சினார். மேலும், அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உதவி செய்தார்.

இந்த ஒருவர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இந்த படம், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி, மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.இந்த நிலையில், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட், தயாளனை தன் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, நேற்று சான்றிதழ் வழங்கினார்.


வாசகர் கருத்து (4)

  • abdulrahim - dammam ,சவுதி அரேபியா

    உங்கள் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் அய்யா

  • rama adhavan - chennai,இந்தியா

    பாராட்டுகிறேன்.

  • Arul Narayanan - Hyderabad,இந்தியா

    தந்தை உள்ளம் இருக்காதா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement