Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்:வெள்ளை தங்கம்

அறிவியல் ஆயிரம்

வெள்ளை தங்கம்


மின்சார வாகனத்துக்கான பேட்டரி தயாரிப்பதற்கு லித்தியம் பயன்படுகிறது. இது 'வெள்ளை தங்கம்' என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் உலகின் பெரிய அளவிலான லித்தியம் இருப்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 'சால்டன் கடல்' ஏரியின் கீழ் பகுதியில் காணப்படுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஏரியின் நீர்பிடிப்பு பரப்பளவு 21,700 சதுர கி.மீ. ஏரியின் கீழ் பகுதியில் 1.8 கோடி டன் அளவு லித்தியம் உள்ளது. இது 35.70 கோடி மின்சார வாகன பேட்டரி தயாரிப்பதற்கு சமம். இதன் மதிப்பு ரூ. 45 லட்சம் கோடி இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.

தகவல் சுரங்கம்

ஊழல் எதிர்ப்பு தினம்

சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் ஊழல் பாதிக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியை தடுப்பதில் ஊழல் முக்கிய காரணமாகிறது. ஊழலின் பாதிப்புகள், அதன் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச. 9ல் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ஊழலுக்கு எதிராக உலகை ஒன்றிணைப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். ஊழலை ஒழிப்பதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து நிலைகளிலும் ஊழலை எதிர்த்து போராட தயங்கக்கூடாது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement