Load Image
Advertisement

பெள்ளாதி குளத்தில் வெள்ளப்பெருக்கு

Flooding in Belladi Pond   பெள்ளாதி குளத்தில் வெள்ளப்பெருக்கு
ADVERTISEMENT
கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால், ஏழு எருமை பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பெள்ளாதி குளம் மூன்றாவது முறையாக நிரம்பி வழிகிறது. காரமடை அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பராயன் நகர் தரைப்பாலத்தில், வெள்ள நீர் அதிகமாக சென்றதால், போக்குவரத்து தடைப்பட்டது.

இதனால் அப்பகுதி வழியாக பள்ளி வாகனங்கள், வேலைக்கு செல்வோர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், நான்கு கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தரைப் பாலத்திற்கு பதிலாக, உயர்மட்ட பாலம் கட்டக்கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement