Load Image
Advertisement

தந்தையை மீட்க சென்ற மகன் வெள்ள நீரில் சிக்கி பரிதாப பலி

Michaung storm, Chennai rain, Chennai flood: The son, who went to rescue his father, got caught in the flood and died a tragic death    தந்தையை மீட்க சென்ற மகன் வெள்ள நீரில் சிக்கி பரிதாப பலி
ADVERTISEMENT


பள்ளிக்கரணை, பள்ளிக்கரணையில்,தந்தையை மீட்க சென்ற மகன், மழைநீர் வடிகால் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளிக்கரணை, காமகோட்டிநகர், காயிதேமிலத் இரண்டாவது தெருவில் வசிக்கும் முருகன், ரேவதி தம்பதியருக்கு அருண், 28, அம்பிகா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த திங்கள் அன்று, மிக்ஜாம் புயலால் பெய்த கன மழை காரணமாக, காலை 10.00 மணி அளவில், காமகோட்டி நகர், காயிதேமிலத் தெருவில் ஆறடி உயரத்திற்கு வெள்ளம் பாயந்தோடியது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.

இந்நிலையில், தன் வீடு எப்படி உள்ளது என பார்ப்பதற்காக, மாலை 3.00 மணி அளவில், மீண்டும் காயிதேமிலத் தெருவில் உள்ள வீட்டிற்கு சென்ற தந்தை முருகன் மாலை 7.00 மணி வரை வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, தந்தை முருகனை அழைத்து வருவதற்காக மகன் அருண் மாலை 7.30 மணி அளவில் காயிதேமிலத் தெருவிற்கு சென்றுள்ளார். அப்போது தெருவில், மழைநீர் வடிகால் பள்ளத்தில் தேங்கியிருந்த 10 அடி ஆழ நீரில் விழுந்துள்ளார்.

இதையடுத்து, மகன் மற்றும் தந்தையை காணவில்லை என உறவினர்கள் தேடும்போது, தந்தை மட்டும், காயிதேமிலத் தெரு வீட்டின் மேல்மாடியில் இருந்துள்ளார். அவரை தேடிவந்த மகன் அருண் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

தன் மகனை காணவில்லை என, பெற்றோர்கள் நேற்று முன்தினம் மாலை, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார், அருணை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, காமகோட்டிநகரில் உள்ள முட்புதரில் அருண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் பள்ளிக்கரணை போலீசார், தேசிய பேரிடர் பேராண்மை மீட்புக்குழு உதவியுடன் அருண் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.


வாசகர் கருத்து (2)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்த மோசமான ஆட்சியின் அவலங்கள் ஒண்ணா ,இரண்டா ??? ....

  • HoneyBee - Chittoir,இந்தியா

    இறைவா.... இப்படியா... வேதனை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement