Load Image
Advertisement

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு

 Union Cabinet Reshuffle    மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு
ADVERTISEMENT
புதுடில்லி :மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் களமிறக்கப்பட்டனர்.

இவ்வாறு எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு செய்யப்பட்ட, 10 எம்.பி.,க்கள் தங்களுடைய பதவிகளை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர். இதில் மூன்று பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள்.

இவர்களுடைய ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றார். இதையடுத்து, இவர்கள் வகித்து வந்த துறைகள், வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தி:

பிரதமரின் பரிந்துரையை ஏற்று, நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ரேணுகா சிங் சருலா ஆகியோர், கவனித்து வந்த துறைகள், வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இதன்படி, மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, தான் ஏற்கனவே கவனித்து வந்த துறைகளுடன், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையையும் கூடுதலாக கவனிப்பார்.

மத்திய இணையமைச்சர்கள் ஷோபா கராந்தலஜே உணவு பதப்படுத்துதல் துறையையும், ராஜிவ் சந்திரசேகர் ஜல்சக்தி துறையையும், பார்தி பிரவின் பவார் பழங்குடியினர் நலத் துறையையும் கூடுதலாக கவனிப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (3)

  • Narayanan - chennai,இந்தியா

    தயவு கூர்ந்து அரசியல் கட்சிகள் எம் எல் ஏ அல்லது எம்பி க்களின் பதவிக்காலத்தை பூர்த்திசெய்யவிடுங்கள் .கட்சிகளில் அடுத்து இருக்கும் மற்றவர்களுக்கு வாய்ப்பை கொடுங்கள் . ஒருவர் ஒருதடவை அல்லது இரண்டுதடவை மட்டுமே அது எம்பி அல்லது எம் எல் ஏ . ஆக பத்து வருடம் மட்டுமே கொடுத்து அடுத்து உள்ளவர்களுக்கு வாய்ப்புக்கொடுத்து கட்சியை வளருங்கள் .

  • M Ramachandran - Chennai,இந்தியா

    தெலுங்கானா மக்கள் தவுரு செய்து விட்டார்கள் அதன் பலன் போக போக தெரியும். சரி சரிபண்ண முடியா தவறு இழைத்து விட்டது

  • duruvasar - indraprastham,இந்தியா

    திருச்சி சிவாவுக்கு ஒரு துறை கொடுத்திருக்கலாம் . ஹிந்தியில் நல்ல உரையாடும் திறன் கொண்டவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement